என்புரட்சி

0

என்புரட்சி

  1. உளவுத்துறையின் வளையத்தில் நான்

பெட்டி ஙீ படிப்பை முடிக்கும் வரையில் நான், அண்ணன் வீட்டிலேயே தங்கி வந்தேன். இல்லற வாழ்வை தொடங்க புது வீடு தேடினேன். இயக்கத்தில் முழுநேர ஊழியனாக இருந்த எனக்கு, இயக்கத்திலிருந்து தரப்படும் ஊதியத்தைக் கொண்டுதான், இனி குடும்பச் செலவுகளை சமாளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இயக்கச் சகோதரர் ஜான் அலி இந்தத் தருணத்தில் எனக்கு உதவினார். அவர் குடும்பத்துடன் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், நாங்கள் தங்கிக் கொள்ள அனுமதியளித்தார். எங்கள் இல்லற வாழ்வு மிகுந்த மகிழ்ச்சியாக கழிந்தது.

பெட்டி மீதான என் நேசம் பல மடங்கு அதிகரித்தது. கணவன்-&மனைவிக்கிடையிலான உறவை இஸ்லாமிய மார்க்கம் புனிதமான ஒன்றாக பாவித்தது. மேற்குலகு உடல் இச்சையை மட்டுமே சார்ந்திருக்கிறது. நேசம் என்பது உடலைத்தாண்டிய ஒன்றாகும்.

மனம், அழகிய குணம், நன்னடத்தை, இங்கிதம், சிந்தனை, விருப்பு-&வெறுப்பு இதெல்லாம் சேர்ந்ததுதான் அழகு. இந்த அழகு எந்தக் காலத்திலும் மங்குவதில்லை. பெண்களின் உடல் அழகு மங்கும் போது, அவள் மீதான ஈர்ப்பு கணவனிடம் குறைந்து போவதை மேற்குலகில் பார்க்கலாம். பெண்ணின் உள்ளத்தை ஆழ்ந்து உணரும்படி ஆணுக்கும், ஆணின் உள்ளத்தை ஆழ்ந்து உணரும்படி பெண்ணுக்கும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. விபச்சார விடுதிகளில் கணவன், மனைவியை ஏமாற்றும் இணைகளைப் பார்த்த எனக்கு, இஸ்லாம் வலியுறுத்தும் இல்லற வாழ்வின் தாத்பரியத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

*****

ஹிண்டன் ஜான்ஸன் ஙீ தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு, ஆம்ஸ்டர்டாம் நியூஸ் வார இதழின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹிக்ஸ் உடனான எனது நட்பு அதிகரித்தது. இதனால், அந்தப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மேடைப் பேச்சுக்கள் மட்டுமல்லாது, வெகுஜன ஊடகங்கள் வழியாகவும் தலைவர் எலிஜா முஹம்மது அவர்களின் கொள்கைகளை கொண்டு செல்லும் வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். “கடவுளின் சினம் கொண்ட மனிதர்கள்” என்ற தலைப்பில் வாரந்தோறும் நான் எழுதி வந்த பத்தி, கறுப்பர்களிடம் மட்டுமல்ல வெள்ளையர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தலைவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஆம்ஸ்டர்டாம் நியூஸ் வார இதழில் எனக்குப் பதிலாக எலிஜா முஹம்மது பத்தி எழுதினார். நான் லாஸ் ஏஞ்சல்ஸ் ஹெரால்ட் டெஸ்பேட்ச் பத்திரிகையில் வாரந்தோறும் எழுதி வந்தேன்.

இந்த இரு பத்திரிகைகளிலும் நாங்கள் இருவரும் எழுதி வந்ததால், நேஷன் ஆஃப் இஸ்லாம் தொண்டர்கள் குறிப்பாக திக்ஷீuவீts ளியீ மிsறீணீனீ தொண்டர்கள், இந்தப் பத்திரிகைகளை விற்று இயக்கச் செய்தியை பரவச் செய்தனர்.

பத்தி எழுதுவது தொடர்பாக அடிக்கடி பத்திரிகை அலுவலகங்களுக்கு சென்று வந்ததால், ஏன் நாமே சொந்தமாக இயக்கத்துக்கென பத்திரிகை தொடங்கக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. நமக்கென ஒரு பத்திரிகை வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. என்னிடம் ஒரு இயல்பு இருந்தது. எதையும் ஒரு தடவை பார்த்துவிட்டால், அது போன்று செய்யக் கற்றுக் கொள்வேன். இது அடியாள் தொழிலில் கொடிகட்டிப் பறக்க அவசியமான பண்பாக இருந்தது.

அந்தப் பண்பு இப்போதும் இருக்கவே செய்தது. ஒரு புகைப்படக் கருவியை வாங்கிக் கொண்டேன். புகைப்படங்கள் எடுத்தேன். நன்றாக புகைப்படம் எடுப்பது வரை, எத்தனை பிலிம் சுருள்களை வீணாக்கினேன் என்ற கணக்கே இல்லை. நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் நடந்த நிகழ்வுகளை அவ்வப்போது எழுதிக் கொண்டே வந்தேன். அதற்கு தேவையான புகைப்படங்களையும் நானே எடுத்தேன்.

மாதத்தில் ஒரு நாள், நியூயார்க் ஹார்லெம் 7வது எண் பள்ளிவாசல் அலுவலகத்தில் என் அறையில் உள்ளே பூட்டிக் கொண்டு, முன்பே எழுதிய கட்டுரைகளையும் அதற்காக எடுத்த புகைப்படங்களையும் ஒட்டி, ஓர் இதழ் போல தயாரித்தேன். அந்த இதழுக்கு “முஹம்மது பேசுகிறார்” என்று பெயர் வைத்தேன்.———————-

*****

நியூயார்க் ஹார்லெம் நகரின் பள்ளிவாசல் அமளிதுமளியானது.

பள்ளிவாசலில் இருந்து எனக்கு வந்த அவசர தொலைபேசி அழைப்பில், கூச்சல் குழப்பத்தை கேட்க முடிந்தது.

ஒரு படக்குழுவினர் பள்ளிவாசலின் உள்ளே வந்து அங்கு நடைபெறும் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து கொண்டிருப்பதாகவும் உடனே பள்ளிவாசலுக்கு வரும்படியும் வீட்டில் இருந்த என்னை வற்புறுத்தினர்.

நான் போகும் இடங்களில் எல்லாம், நேஷன் ஆஃப் இஸ்லாம் இயக்க உறுப்பினர்களுக்கு, ஏற்கனவே நான் அறிவுறுத்தியிருக்கிறேன். எந்தப் பள்ளிவாசலில் நான் பேசத் தொடங்கினாலும், ‘‘திஙிமி அதிகாரிகள் கூட்டத்திற்கு வந்திருக்கிறீர்களா?’’ என கேட்பதை வழக்கமாக வைத்திருந்தேன்.

அதனால் விழிப்புணர்வு பெற்றிருந்த இயக்க சகோதரர்கள், பள்ளிவாசலின் உள்ளே படக்குழுவினர் ஒளிப்பதிவு செய்வதை அனுமதிக்காமல் தடுத்தனர். ஹார்லெம் 7ம் எண் பள்ளிவாசலில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக நான் பள்ளிவாசலுக்கு விரைந்தேன்.

அங்கு லூயிஸ் லோமக்ஸ் இருப்பதைப் பார்த்து புன்னகைத்தேன்.

கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இவர். நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த, கீழிஜிகி தொலைக்காட்சியில் லூயிஸ் லோமக்ஸ் பணிபுரிந்து வந்தார். அந்தத் தொலைக்காட்சிக்காக, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை பற்றிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப, என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பின மக்களிடம், நேஷன் ஆஃப் இஸ்லாம் இயக்கத்தை பரவலாகக் கொண்டு செல்ல, வெகுஜன ஊடகங்களை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இயக்கத்தின் தலைமைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.

வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த வெகுஜன ஊடகங்களை தலைவர் எலிஜா முஹம்மது அவர்கள் நம்பியதுமில்லை, விரும்பவுமில்லை. அதனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்தும் எண்ணமும் அவருக்கு இல்லை. ஆனால் இதில் எனக்கு உடன்பாடில்லை. வெகுஜன ஊடகங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருந்தது.

ஊடகவியலாளர் லூயிஸ் லோமக்ஸ் கீழிஜிகி தொலைக்காட்சிக்காக, இயக்கத்தைப் பற்றி ஆவணப்படம் தயாரிக்க அனுமதி கேட்பது பற்றி, தலைவர் எலிஜா முஹம்மதோடு விவாதித்தேன். இயக்கத்தைப் பற்றி ஆவணப் படம் எடுப்பதற்கு அவரும் அனுமதி அளித்தார்.

“என்ன துணைக் கேப்டன் ஜேம்ஸ் 67ஙீ.. அதிர்ச்சியாயிட்டீங்களா? லோமக்ஸ் நம்மாளுதான். அவர் வேலை செய்யற டிவி-ல நம்ம பத்தின நிகழ்ச்சி ஒளிபரப்ப போறாங்களாம்! அதுக்காகத்தான் இந்த ஷூட்டிங் ஏற்பாடெல்லாம். தலைவர்ட்ட முறையா இதுக்கு அனுமதி வாங்கிட்டுத்தான் ஷூட் பண்றாங்க. யாரும் பயப்பட வேண்டாம்”

“ஓகே பிரதர் மால்கம்..” ஜேம்ஸ் 67ஙீ ஒளிப்பதிவுக்கு தேவையான உதவிகளைச் செய்தார்.

ஆஃப்ரிக்க அமெரிக்கரான லூயிஸ் லோமக்ஸ், அடிப்படையில் ‘ஒருங்கிணைதல்’ கொள்கையில் பிடிப்பு கொண்டவர். அதேசமயம், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பினரின் கறுப்பின பெருமை, பொருளாதாரத்தில் சுயமாக நிற்பது போன்றவை எங்கள் அமைப்பின் பக்கம் கவனம் குவிக்க வைத்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

வாஷிங்டனில் நடைபெற்ற எங்கள் அமைப்பின் பிரம்மாண்ட பேரணியை ஒளிப்பதிவு செய்ய லோமக்ஸ்-க்கு அனுமதி அளித்திருந்தோம்.

‘மால்கம், உங்களுக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை இருக்கு.. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்..”

அந்தப் பேரணியில் கலந்து கொண்ட அவர், தலைவர் எலிஜா முஹம்மதுவிடம் பேட்டி எடுப்பதற்காக காத்திருந்தார். அப்போது இப்படி அவர் என்னிடம் கேட்டார்.

“என்ன… ரெண்டு பேருமே கறுப்பர்தானே.. ஆனா, நான் வெள்ளையர்களை பிசாசு என்கிறேன். நீங்கள் அவர்களோடு இணைந்து வாழ வேண்டும், வாழலாம் என்கிறீர்கள்..”

“இது எனக்கு தெரிந்ததுதானே.. அதில்ல.. உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாதது ஒன்று உண்டு.”

“ம்.. சொல்லுங்க..”

“நானும் உங்களை மாதிரி சிறையில் இருந்தவன்தான்.. கார் ஒன்றை திருடி விற்ற குற்றத்திற்காக ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறேன்..” சொல்லிவிட்டு சிரித்தார்.

அவரின் வெளிப்படையான குணத்தை அறிந்து நானும் சிரித்தேன்.

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் வேறு பள்ளிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. தலைவர் எலிஜா முஹம்மது, என்னுடைய மற்றும் பிற தலைவர்களின் உரைகளும் பதிவு செய்யப்பட்டன.

தலைவர் எலிஜா முஹம்மதிடமும் என்னிடமும் லூயிஸ் லோமக்ஸ் பேட்டி எடுத்தார்.————————————-

*****

ஹார்லெம் நகர பள்ளிவாசலில் இருந்த எனது அலுவலகத்துக்கு வழக்கமாக நான் சென்ற போது ஒருநாள், அலுவலகத்திற்குள் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தேன். யாரோ வந்து சென்றது போன்ற தடயம் தெரிந்தது. இது எனக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது.

தொலைக்காட்சி நிறுவனத்தினர் ஆவணப்படத்துக்காக ஒளிப்பதிவு செய்ததைப் பயன்படுத்திக் கொண்டு, என்னுடைய அலுவலகத்துக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்ததை விசாரித்து அறிந்து கொண்டேன். அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதி அளித்தவர்களிடம் இதனை பெரிய விஷயமாக நான் காட்டிக் கொள்ளவில்லை.

நான் நிகிஸி கீளிளிஞி லாரி வடிவமைக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய சமயத்தில், டெட்ராய்ட் நகர பள்ளிவாசலில் துணை இமாமாக நியமிக்கபட்ட போது திஙிமி அதிகாரி வந்து விசாரித்ததை இப்போது நினைவுபடுத்திக் கொண்டேன்.

அப்போதுதான் நான் தீவிரமாக இயக்கப் பணியாற்றிக் கொண்டு இஸ்லாமிய அழைப்பு பணிகளை விரைவாக முன்னெடுத்திருந்தேன். இதனை மோப்பம் பிடித்து வந்த திஙிமி அதிகாரி, கட்டாய இராணுவச் சேவையில் இணைவது தொடர்பாக விசாரிக்க வந்தவர் போல காட்டிக் கொண்டு போகிற போக்கில், “நீங்கள் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறீர்களா? அந்த அமைப்பில் என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள்?” என்ற கேள்விகளைக் கேட்டார்.

அப்படி ஒரு அமைப்பு இருப்பது எனக்குத் தெரியாது, நான் எந்த அமைப்பிலும் உறுப்பினர் இல்லை என்றும் சொல்லியிருந்தேன்.

ஆனால், திஙிமி இப்போது என் முதுகுக்குப் பின்னால் நின்று உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டேன்.

“துணைக் கேப்டன் ஜேம்ஸ், யார் இங்க வந்து போட்டோ எடுத்தது, ஆள் அடையாளம் தெரியுமா?”

“தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மாதிரிதான் அவர் இருந்தார். ஏன்? லோமக்ஸ் பிரதர் அனுப்பினதாதான் சொன்னாரு.. வேறு ஏதாவது சேனல்ல இருந்து அவங்க வந்திருந்தாங்களா?”

நான் ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய கேள்வி துணைக் கேப்டன் ஜேம்ஸ்-சை சந்தேகம் கொள்ள வைத்தது. அவரும் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை.

என்னுடைய நடவடிக்கைகளையும், நடமாட்டங்களையும் என்கூடவே இருக்கும் யாரோ உளவுத்துறைக்கு துல்லியமாக தெரிவிக்கிறார்கள். யார் அது? என்னுடன் இருக்கும் நெருங்கிய நபர்களுக்குத்தான் என்னுடைய இயக்கச் செயல்பாடுகளும், அதற்காக நான் செல்லும் இடங்களும் தெரிய முடியும்.

ஹார்லெம் பள்ளியில் எனக்கு உதவியாளராக துணைக் கேப்டன் ஜேம்ஸ் 67ஙீ இருக்கிறார். என்னுடைய உதவியாளரான அவர், இயக்கப் பணிகளில் என் கூடவே பயணிக்கும் அவர், உளவாளியா?

இயக்க வேலை தவிர வீட்டில் இருக்கும் நேரத்தில் என்னுடன் கூடவே இருப்பது என் மனைவி பெட்டிஙீ. அவள் உளவாளியா?

தேசிய செயலாளரான ஜான் அலி-யின் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் நான் தற்போது குடியிருந்து வருகிறேன்.

இப்போது புதிதாக நான் குடியிருக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் யாராவது உளவு வேலை பார்க்கிறார்களா?

யார் என்னைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பது?

————————————–*****

லூயிஸ் லோமக்ஸ் தயாரித்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்குள் நான் மூன்று வார கால வெளிநாடு பயணம் மேற்கொண்டேன். எகிப்து, அரேபியா, சூடான், நைஜீரியா மற்றும் கானாவுக்குச் சென்று வந்தேன். தலைவர் எலிஜா முஹம்மது அவர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவே இந்த நாடுகளுக்கு நான் சென்று வந்தேன். குறைந்த நாட்களே இருந்ததால், நான் விரும்பிய தலைவர்களை இந்தப் பயணத்தில் சந்திக்க முடியவில்லை.

தொடரும்..

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.