என்புரட்சி

0

என்புரட்சி

  1. ‘ரகசிய போதை சந்தை’யின் எதிரி

நியூஜெர்ஸி மாகாணத்தின் நியூயார்க் நகர 25-ம் எண் பள்ளிவாசலில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இணைபவர்களை வரவேற்பதற்கான நிகழ்ச்சி அது. பொதுவாக இப்படி நிகழ்ச்சி எதுவும் வைக்கும் வழக்கம் இயக்கத்தில் இல்லை. ஆனால், போதையிலிருந்து மீண்டு வந்தவர்களை அரவணைக்கும் விதமாக இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

“தாமஸ் ப்ரோ, நீங்கதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர்” காரை விட்டு இறங்கும் போது என் கார் ஓட்டுநர் தாமஸ் 15ஙீ ஜான்ஸனிடம் தெரிவித்தேன்.

“நானா? நீங்க இருக்கும் போது நான் எப்படி பேசுறது” என்னை அவர் மறைமுகமாக கிண்டல் செய்வதைப் போல நான் உணர்ந்தேன். நானே போதை அடிமையாக இருந்து மீண்டவன்தானே! அப்படியிருக்கும் போது நான்தானே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சாளராக இருக்க வேண்டும் என்பதை குத்திக்காட்டும் வகையில் தாமஸ் குறிப்பிடுகிறார் என்று நான் சிரித்து விட்டேன். ஆனால் அவர் அந்தத் தொனியில் பேசவில்லை என்பதும் எனக்கு தெரியும்.

“சரியாகச் சொன்னீர்கள். ஆனால் நீங்கள்தான் சிறந்த உதாரணமாக இருக்க முடியும் நிகழ்ச்சி தொடங்கிய பின் உங்களுக்கு அது புரியும்”

ஜேம்ஸ் 3ஙீ என்றும் ஜேம்ஸ் ஷாபாஸ் என்றும் அழைக்கப்படும் சகோதரரை, இந்தப் பள்ளியின் தலைமை இமாமாக நியமித்திருந்தார் மரியாதைக்குரிய எலிஜா முஹம்மத்.

“அஸ்ஸலாமு அலைக்கும்… வாங்க ப்ரதர் மால்கம்…” ஜேம்ஸ் ஷாபாஸ் எங்களை வரவேற்றார்.

60-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அனைவரும் போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படி நிகழ்ச்சியை பல்வேறு பள்ளிவாசல்களில் இயக்கம் நடத்தி வந்தது. போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டு, இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கையை இந்த நிகழ்ச்சியில்தான் நான் அதிகமாகப் பார்த்தேன்.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“வ அலைக்குமுஸ் ஸலாம்” உற்சாகமான குரலில் பதில் கிடைத்தது.

“கறுப்பர்கள் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் சேரிகளில் உழல்வதற்கு, அவர்களின் போதைப் பொருள் பழக்கமும் ஒரு காரணம் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?”

என் எதிரில் அமர்ந்திருந்த போதைப் பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள், அதனை வாழ்ந்து அனுபவித்தவர்கள் என்பதால் கண்களில் அந்தச் சோகம் கசிய தலையை அசைத்தனர்.

“போதைப் பொருளுக்கு அடிமையாகி வாழ்வை தொலைப்பதுதான் கறுப்பர்களின் பொருளாதார கடைநிலைக்கு முக்கிய காரணம். இதை இயக்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. குறிப்பாக என்னுடைய வாழ்வே இதற்கு மிகச் சிறந்த உதாரணம். எல்லா விதமான போதைப் பொருள்களையும் உபயோகித்த நான், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின், அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற்று விட்டேன். என்னுடைய அனுபவத்தின் அடிப்படையிலேயே நமது இயக்கத்தில் போதை அடிமைகளின் மறுவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். நானே பேசிக் கொண்டிருந்தால் உங்களுக்கு நம்பிக்கை வராது. தாமஸ்… இங்க வாங்க… உங்க அனுபவத்தை சொல்லுங்க”

தயங்கியபடி எழுந்த தாமஸ் 15ஙீ ஜான்ஸன், இதற்குத்தான் காரிலிருந்து இறங்கும் போது அப்படிச் சொன்னீர்களோ என்பதைப் போல என்னைப் பார்த்தார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.