என்புரட்சி: 7.வெள்ளையர்களின் பாவக் கிடங்கு

0

எனக்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை. துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டேன். ஆறேழு மாதங்கள் இது நீடித்தது.

போலீசுக்குப் பயந்து, பெரும்பாலும் அறையில் கிடந்த நான் போதையில் மிதந்தேன்.

ரெஜினால்ட் வந்தான். அவனுக்கு ஒரு ‘தொழில்’ ஏற்பாடு செய்து கொடுத்தேன். திருட்டுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, கறுப்பர் தெருக்களில் விற்பதுதான் அந்தத் ‘தொழில்’.

ஒரு நாள், மேடம் ஒருவர் மூலம் ஹார்லெம் நகரின் இருட்டு முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கறுப்பர்களின் நகரில் வெள்ளையர்களின் தனிச் சிறப்பான இரவு உலகத்தை அந்த மேடம் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

விபச்சாரத் தொழில் நடத்தி வந்த அந்த மேடத்திற்கு சொந்தமாக ஒரு சூதாட்ட விடுதியும் இருந்தது. அந்த சூதாட்ட விடுதியில் எனக்கு வேலை. ஆனால் உண்மையில் ‘வாடிக்கையாளர்களை’ குறிப்பிட்ட இடங்களில் கொண்டு போய் விடுவதுதான் என்னுடைய உண்மையான வேலை. சூதாட்ட விடுதியில் இருந்த தொலைபேசி ஒலித்தது.

‘‘ரெட் உனக்குத்தான் போன்’’ வரவேற்பாளர் என்னிடம் தொலைபேசியைத் தந்தார்.

‘‘ம் சொல்லுங்க மேடம்’’ அவர் சொன்ன அடையாளங்களை கற்பனை செய்து கொண்டேன்.

‘‘ஓகே’’

பிராட்வே சாலையின் முடிவில் இருந்த ஆஸ்டர் உணவு விடுதிக்கு அருகில் சென்றேன். நான் என்னுடைய கோர்ட்டில் வெள்ளை நிறப் பூ-வை சொருகிக் கொண்டேன். இதுதான் என்னைப் பற்றி வாடிக்கையாளரிடம், மேடம் சொல்லி வைத்திருந்த அடையாளம். எனக்காக காத்திருந்தவரை, மேடம் போனில் சொன்ன அடையாளங்கள் மூலம் உறுதி செய்து கொண்டு, சைகை மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.