என்.ஐ.ஏ அதிகாரி முஹம்மது தன்சீலின் மனைவியும் மரணம்

0

புது டெல்லி: சில வாரங்களுக்கு முன்பு 24 துப்பாக்கி குண்டுகளை ஏற்று பலியான தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிகாரி முஹம்மது தன்சீல் அஹமதுவின் மனைவி பர்சானா பலத்த காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு உ.பி மாநிலத்தில் NIA அதிகாரி தன்சீல் அஹமது வாகனத்தில் வரும் போது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.இதில் அவர் மனைவி பர்சானாவும் (40) பலத்த காயமுற்று நொய்டாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு AIIMS இன் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

பர்சானாவில் கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் துளைக்கப்பட்டிருந்தது, அவர் வெண்டிலேடர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். “அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தது, எனினும் அவர் கஷ்டமான நிலையிலேயே இருந்து வந்தார் “என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இந்தியாடுடே ரிப்போர்ட் படி, என்.ஐ.ஏ அமைப்பு அவரின் மரண செய்தியை அறிவித்தது. “மறைந்த என்.ஐ.ஏ ஆய்வாளர் தன்சில் அஹமது வின் மனைவி திருமதி. பர்சானா காத்தூன் அவர்கள் பலத்த காயங்கள் காரணமாக AIIMS டிரவ்மா சென்டரில் இன்று காலை 10.45 மணிக்கு உயிரிழந்தார் என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டது.

காதூனின் இறுதிச் சடங்கு இன்று மாலை 6 மணிக்கு ஜாமியா மாலிய இஸ்லாமியா மைதானத்தில் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Comments are closed.