என்.ஐ.ஏ. அரசு ஏஜென்சியா? பா.ஜ.க.வின் அடியாளா?

0

என்.ஐ.ஏ. அரசு ஏஜென்சியா? பா.ஜ.க.வின் அடியாளா?
கோவை இளைஞர்கள் மீது தொடரும் அத்துமீறல்

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்க முடியாத தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), விசாரணைக்கு அழைத்துச் செல்லும் முஸ்லிம் இளைஞர்களிடம் மிகவும் மட்டகரமான பேரங்களை பேசி வருவது தெரிய வந்துள்ளது. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசு துறைகளை தங்கள் ஏவலாட்களாக நடத்தி வரும் போக்கிற்கு என்.ஐ.ஏ.வும் தப்பவில்லை. இந்துத்துவ, ஃபாசிச கொள்கைகளை உறுதியாக எதிர்க்கும் தனி நபர்கள் மற்றும் இயக்கங்களை இந்தியாவின் மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் விசாரணை ஏஜென்சிகளான சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை போன்றவைகளை கொண்டு அச்சுறுத்தி பழி வாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் முஸ்லிம் இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொய்க்காரணங்களை கூறி 2016ம் ஆண்டு முதல் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து பொய் வழக்குகளை புனைந்தனர். குறிப்பாக கோவையில் 2016ம் ஆண்டு முதற்கொண்டு அப்பாவி இளைஞர்களை சட்ட விரோதமாக விசாரணை என்ற பெயரில் கடத்திச் செல்வதும் அவர்களது வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் சோதனை செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் கேரள இளைஞர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கோவை ஜி.எம். நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் நவாஸ் (21) என்பவரின் வீட்டை அக்டோபர் 2016-ல் ‘அதிரடி சோதனை’யிட்டு மொபைல், லேப்டாப் போன்றவற்றை கைப்பற்றிய என்.ஐ.ஏ. தொடர்ந்து பல முஸ்லிம் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்தது. 2017 ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 5 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து விசாரித்து வந்தது. பல மாத விசாரணைக்கு பிறகு போதிய ஆவணங்கள் கிடைக்காத காரணத்தால் இந்த வழக்கை என்.ஐ.ஏ. கிடப்பில் போட்டது. அப்பாவிகளை இந்த வழக்கில் சிக்க வைக்க முடியாத என்.ஐ.ஏ.வின் கையில் அடுத்து கிடைத்ததுதான் சசிகுமார் வழக்கு.

சசிகுமார் படுகொலையும் கலவரமும்

கோவை ரத்தினகிரி பகுதியில் 2016 செப்டம்பர் 18 அன்று ஹக்கீம் என்ற முஸ்லிம் இளைஞர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமுன்னணி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடந்து மூன்று நாள் கழித்து செப்டம்பர் 22 அன்று இரவு 11.15 மணிக்கு இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் (38) கொலை செய்யப்பட்டார். நள்ளிரவு 1.30 மணிக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், போலீஸார் எந்த வித விசாரணையும் துவக்குவதற்கு முன்பாக, இந்த சம்பவத்தை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் முஸ்லிம் சமூகத்தை மிரட்டும் விதமாக தமிழகத்தை குஜராத்தாக மாற்றப்போவதாக கூறி கலவரத்தை தூண்டி விட்டார்.

23.9.2016 நள்ளிரவில் இருந்தே கோவையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதில் சுமார் 3.5 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டது. மேலும் பெட்ரோல் குண்டு வீசியும் கல் வீசியும் 8 பள்ளிவாசல்களை தாக்கினர். இந்த கலவரத்துடன் தொடர்புடைய 600க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குகள் பதியப்பட்டன. கோவை கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 239 வழக்குகளில் 229 வழக்குகள் இந்து முன்னணியினர் மீது மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.