என்.ஐ.ஏ. டெல்லி வழக்கு நால்வர் விடுதலை

0

என்.ஐ.ஏ. டெல்லி வழக்கு நால்வர் விடுதலை

பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ கடந்த ஆண்டு டெல்லியில் கைது செய்த நான்கு நபர்களை தற்போது விடுதலை செய்துள்ளது.

இஸ்லாமிய கிலாபத்தை நிலைநாட்ட முயற்சித்ததாகவும் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ அவர்கள் மீது குற்றம் சாட்டியது. ஆனால் தற்போது அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாததால் ஆறு மாதங்களுக்குப் பிறகு முகம்மது இர்ஷாத், ரயீஸ் அகமது, ஸெய்த் மாலிக் மற்றும் முகமது ஆஸம் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 2018இல் 14 நபர்களை கைது செய்த என்.ஐ.ஏ இவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமத்தியது. கைது செய்யப்பட்ட மற்ற 10 நபர்களுக்கு எதிராக வழக்கு நடத்தப்படும் என்றும் என்.ஐ.ஏ தற்போது அறிவித்துள்ளது.

Comments are closed.