என் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…

0

என் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…

15. “இறைவன் முன் மண்டியிட்டேன்”

நார்ஃபோல்க் சிறை அமைதியிழந்தது. அதிகாரிகள் அங்கும் இங்கும் அவசரமாக அலைந்தனர். பரபரப்பாகக் காணப்பட்ட அவர்கள், ஒவ்வொரு அறையாக, கைதிகளிடம் விசாரணை செய்தனர். சிறைக்குள் ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ அல்லது கைதி யாரேனும் தப்பித்து விட்டானோ என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

என் அறைக்கு வந்த காவலர்கள் சக கைதிகளிடம், அவர்கள் உறவினர்கள் எந்தப் பகுதியில் இருக்கின்றனர், யார், யாருக்கு கடிதம் எழுதுகின்றீர்கள் போன்ற விவரங்களைக் கேட்டனர். ஆனால், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, என்னிடம் மட்டும் விசாரிக்காமல் சென்று விட்டனர்.

ஒரு வெள்ளைக் காகிதத்தில் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், கடிதம் எழுதினேன். திருத்தித் திருத்தி எழுதினேன். இருபத்தி ஐந்து முறையாவது திருத்தி எழுதியிருப்பேன். என் உள்ளத்தில் இருந்தவைகளை ஓரளவுக்கு இலக்கணத்தோடு எழுத முயன்றேன். ஆனால் கையெழுத்து மிகவும் மோசமாகத்தான் இருந்தது. அதுதான் அவருக்கு நான் எழுதிய முதல் கடிதம். அந்தக் கடிதம் என் வாழ்வைப் புரட்டிப் போட்டது. அது முதல் “என் புரட்சி” தொடங்கி விட்டது.

மதிப்புமிகுந்த எலிஜா முஹம்மத் அவர்களுக்கு, நார்ஃபோல்க் சிறையிலிருந்து மால்கம் லிட்டில் எழுதுகிறேன். உங்களை நான் பார்த்ததில்லை. உங்களைப் பற்றி என்னுடைய சகோதர, சகோதரிகள் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். உங்களைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.

நீங்கள் அமெரிக்காவில் கறுப்பர்கள் மத்தியில் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை, என்னுடைய தம்பி ரெஜினால்ட் எனக்குச் சொல்லியிருக்கிறான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Goto Index

 

Comments are closed.