என் புரட்சி: என்னை வடிவமைத்த சிறை

0

என் புரட்சி-16: என்னை வடிவமைத்த சிறை

எலிஜா முஹம்மதுவுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தேன். அவரும் எனக்கு பதில் கடிதங்கள் எழுதினார். அதில் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை விளக்கினார். சிறையில் இருந்த என்னைப் பார்க்க வந்த ஹில்டாவும் ரெஜினால்டும் வெள்ளையர்களின் மேலாதிக்கம் பற்றியும், கறுப்பர்களின் அடிமை மனநிலை பற்றியும், எலிஜா முஹம்மது கூட்டங்களில் போதித்தவற்றை எனக்கு சொன்னார்கள்.

இவர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதும் போது, என்னுடைய உள்ளுணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்பதையும், மொழியைப் பயன்படுத்துவதில் நான் மிகவும் பின் தங்கியிருப்பதையும் உணர்ந்தேன். இதனைப் போக்கி, ஆங்கில மொழியில் நேர்த்தியாக எழுதுவதற்காக அகராதியின் உதவியை நாடினேன். ஒரு நாளைக்கு ஒரு பக்கம் வீதம், அந்தப் பக்கங்களில் உள்ள வார்த்தைகளை தாளில் எழுதிப் பார்த்து மனனம் செய்தேன்.

நானே மலைக்கும் விதமாக, ஆங்கில அகர வரிசையில் அமைந்த ஆயிரக்கணக்கான வார்த்தைகளை அதன் மூலச் சொல் விளக்கங்களோடு கற்றேன். இந்த முறையிலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று, இறுதியில் முழு அகராதியையும் மனனம் செய்தேன். ஏறக்குறைய பத்து இலட்சம் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன்.

ஓர் அகராதியையே கற்றுக் கொள்ள முடியும் என்பதை அறிந்த எனக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. இந்த நம்பிக்கை தந்த உந்துதலால், ஆங்கில புத்தகங்களை அதுவும் காத்திரமான புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.