என் புரட்சி: ஏமாந்த அமெரிக்க ராணுவம்

0

ஏமாந்த அமெரிக்க ராணுவம்
-ஃபனான்

எனக்கு மூன்று விஷயங்கள் அப்போது பிடிக்கவில்லை.

ஜெயில், வேலை, ராணுவம்.

அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் தம்பி ரெஜினால்ட் பல விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தான். அவன் சொன்ன ஒரு தகவலால் இருவருமே  சிரித்து விட்டோம். குடும்ப உறுப்பினர்களின் தற்போதைய நிலையை அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

‘‘மால்கம், அண்ணன் வில்ஃப்ரட் மதம் மாறிட்டான்’’

‘‘மதம் மாறிட்டானா?’’

‘‘ஆமா, இஸ்லாம் மதம். இப்ப அவன் எப்பவுமே தொப்பியோடதான் இருக்கிறான்.’’

வில்ஃப்ரட்டை தொப்பியுடன் கற்பனை செய்து பார்த்த நான் சிரித்துக் கொண்டே இருந்தேன்.

ரெஜினால்ட் எனக்கு அடுத்துப் பிறந்தவன்.

அக்கா யெல்லா என்னுடன் கூடப் பிறந்தவர் கிடையாது. என் தந்தை, ஏர்ல் லிட்டில்-லின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்.

லூயிசா லிட்டில். என் அம்மா. என் அம்மாவை திருமணம் செய்த பிறகு, வில்ஃப்ரட், ஹில்டா, பில்ஃபர்ட் பிறந்தனர். அடுத்தது நான்.

ரெஜினால்ட் கப்பலில் வேலை பார்த்து வந்தான். நான் வசதியாக இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தேன்.

‘‘நாம விரும்புறத அடையனும்னா, அது ஏற்கனவே நம்மள்ட்ட இருக்கிறது மாதிரி தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளனும் ரெஜினால்ட்.’’

நான், அவனுக்கு ஹார்லெம் நகரிலேயே வேலை ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தேன். அவனை வழியனுப்பி வைத்து விட்டு வந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சேமி மாமாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. ராணுவத்தில் சேருவதற்கான அழைப்புக் கடிதம் அது. அவருடைய முகவரிக்கு வந்திருந்ததை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

எனக்கு ராணுவத்தில் சேர அழைப்புக் கடிதம் வந்திருப்பது அறிந்து, பக்கத்து அறைகளில் இருந்தவர்கள் கூடி விட்டனர்.

‘‘ஏய் ரெட், கடைசில உன்னையும் அவங்க விட்டு வைக்கலியா?’’

‘‘போரில் கலந்து கொண்டு சாவதற்குத்தான் கறுப்பர்களின் உயிர் வெள்ளையனுக்கு தேவைப்படுகிறது’’ நான் பதில் சொன்னேன்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.