என் புரட்சி: மிஸ்டர் ரெட்

0

என் புரட்சி: மிஸ்டர் ரெட்

திருடுவது. வீடு புகுந்து திருடுவது. இதுதான் என் திட்டம். நான் சிந்தித்து வைத்திருந்த அடுத்த தொழில், புராஜெக்ட் இதுதான். ஷார்ட்டிக்காக -நிறைய வருமானம் கிடைப்பதற்காக வீடுகளில் கொள்ளை அடிக்கும் தொழிலைத் தேர்வு செய்தேன்.

திருட்டுத் தொழிலில் இறங்கலாம் என்று சொன்னவுடன், மறுப்புத் தெரிவிக்காமல் ஷார்ட்டி ஒப்புக் கொண்டார். அவர் ஒரு ஆலோசனையும் சொன்னார். தன்னுடைய நண்பன் ரூடியையும் இந்தத் தொழிலில் சேர்த்துக் கொள்ளலாமென்றார்.

‘‘என்ன பிளான் ரெட்…’’

‘‘ஷார்ட்டி… கொள்ளையடிப்பதில் பலவகை உள்ளது ஃப்ரெண்ட்…’’

“ஓ ஹோ…” ஷார்ட்டி புன்னகைத்தார்.

‘‘கடையில திருடுறது… குடோன்ல திருடுறது… அபார்ட்மெண்ட்ல திருடுறது… தனி வீட்டுல திருடுறது… ஹாஸ்டல்ல திருடுறது… இப்படி நிறைய இருக்கு நண்பா…’’

‘‘ம்… நிறைய அனுபவம் இருக்கும் போலயே… அப்புறம்…’’ ஷார்ட்டி ஆர்வமாக கேட்டார்.

‘‘பகல்ல திருடுறது… ராத்திரில திருடுறது… யாரும் இல்லாத வீட்டுல திருடுறது… நாம எந்த குரூப்புன்னு முடிவு செய்யணும்…’’

எதுவாக இருந்தாலும் பகலில் கொள்ளையடிக்கக் கூடாது என மனதில் நினைத்துக் கொண்டேன். ஹார்லெம் அனுபவம் இன்னும் நினைவில் இருந்து எனக்கு அகலவில்லை.

ஆறடி உயரம், செம்பழுப்பு நிற தோற்றம், காங்க் செய்து செம்பட்டையான என் தலைமுடி – என்ற அடையாளம் என்னை எளிதில் காட்டிக் கொடுத்துவிடும். பகலில் திருடினால், பொதுமக்கள் அடையாளத்தை காவல்துறையில் எளிதாக சொல்லிவிடுவார்கள் என்று பயந்தேன். இருந்தாலும் இந்த பயத்தை, -பலஹீனத்தை நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஷார்ட்டியிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.