என் புரட்சி – மீண்டும் பாஸ்டனில்

0

என் புரட்சி மீண்டும் பாஸ்டனில்

பாஸ்டன் நகரில் ராக்ஸ்பரி ஏரியாவில் மீண்டும் நான். உயிர் பயத்திலிருந்து மீள கஞ்சாவை புகைத்து சுவாசித்தேன். கஞ்சா புகைக்க எனக்கு பழகிக் கொடுத்த ஷார்ட்டியே, நான் கஞ்சாவுக்கு நிரந்தரமாக அடிமையானதைப் பார்த்து பயந்து விட்டார்.

நான்கு ஆண்டுகளாக ஹார்லெம்மில் உயிருக்குப் பயந்த வாழ்க்கையை மறக்க சோஃபியா எனக்கு உதவினாள். என் வருகையால் சோஃபியா மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். பழையபடி அவளுடன் ஊர் சுற்றினேன்.

ஒரு மாதம் பாஸ்டனில் சுற்றித் திரிந்து கொஞ்சம் மாறியிருந்த அந்த நகரின் போக்கை புரிந்து கொண்ட நான், மீண்டும் ஹார்லெம் செல்லும் நினைவைக் கைவிட்டேன். இங்கேயே ஏதாவது பிழைப்பைத் தேடிக் கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.

என்னைப் போன்ற கலக சிந்தனை கொண்ட கறுப்பினத்தவன் ஒருவனுக்கு பாஸ்டன் சேரியில் என்ன தொழில் தெரியும்?

இங்கேயும் அடியாள் தொழில் செய்யலாம் என முடிவெடுத்தேன்.

அடியாள் தொழிலில் இறங்குவதென்பது புதிதாக ஏதோ ஒரு கடையில் வேலைக்குச் சேர்வது போல சாதாரணமான விஷயம் கிடையாது. அதுவும் பாஸ்டன் போன்ற சேரியில், கறுப்பின தாதாக்களின் மத்தியில் பொடியனான நான் அடியாளாக வலம் வருவது அவ்வளவு எளிதல்ல. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.