என் புரட்சி: முற்றுகையிடப்பட்டேன்!

0

என் புரட்சி: முற்றுகையிடப்பட்டேன்!

போதைப் பொருள் விற்றது, வழிப்பறியில் ஈடுபட்டது, விபச்சாரத் தரகனாக மாறியது -இதெல்லாமே, ஹார்லெம் நகரின் மோசமான நபர்களில் ஒருவனாக என்னை அடையாளம் காணப் போதுமானதாக இருந்தது.

யூதர் ஒருவரின் சாராயக் கடையில், அன்றைய வியாபாரப் பணம் முழுவதையும் ஒருவன் கொள்ளையடித்துச் சென்று விட்டான். அந்தக் கொள்ளையன் என்னைப் போலவே இருந்ததால், அடையாளங்களின் அடிப்படையில் என் மீது சந்தேகப்பட்டு, அடியாட்கள் என் வீட்டிற்கு வந்தனர்.

நான் திருடவில்லை என உறுதியாக மறுத்து விட்டேன். அதனை நம்பி அவர்கள் சென்று விட்டனர். இருந்தாலும் இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக சில நாட்கள் தலைமறைவாக இருந்தேன்.

மீண்டும் ஹார்லெம் வந்து, ஒரு யூதரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். பழைய உணவு விடுதிகளையும் மதுக்கடைகளையும் வாங்கி சீரமைப்புச் செய்து, கொஞ்ச நாட்கள் கடையை நடத்தி விட்டு பின்பு, நல்ல விலைக்கு விற்று விடுவது அந்த யூதரின் வழக்கம்.

‘‘ரெட் கறுப்பர்கள் இல்லாவிட்டால் அமெரிக்காவில் யூதர்களின் நிலை மோசமாகி விடும்’’. அந்த யூத முதலாளி என்னிடம் சொன்னார்.

‘‘எப்படி?’’ நான் வியப்போடு கேட்டேன்.

‘‘வெள்ளையர்களை விட அறிவாளிகளாக இல்லாவிட்டால் அமெரிக்காவில், கறுப்பர்களைவிட யூதர்கள்தான் மோசமாக நடத்தப்படுவார்கள்’’ வெள்ளையர்களிடமிருந்து நீங்கள்தான் எங்களைக் காப்பாற்றியிருக்கிறீர்கள் என்ற பாவத்தோடு அவர் என்னைப் பார்த்தார்.

யூதர்களின் மேலாதிக்க மனோபாவத்தின் உளவியல் பின்னணியைப் புரிந்து கொண்டேன். அந்த வேலையும் கொஞ்ச நாட்களே நீடித்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.