என் புரட்சி

0
  1. ஆனந்தக் களிப்பில் அமைப்புச் சகோதரர்கள்

பத்து மாதங்கள் சுமந்த சிசுவை, கண்ணும் கருத்துமாக கருப்பையில் வளர்த்து, அதனை பெற்றெடுக்கும் போது எதிர்கொள்ளும் எத்தகைய வலிகளையும் கணத்தில் மறந்து, அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் தாயின் மட்டற்ற மகிழ்ச்சி மனநிலையில் நான் திளைத்திருந்தேன்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையான நான், சிறையிலிருந்து வந்த பின், முஸ்லிமாகி, அந்தக் கொள்கையை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பிரச்சாரம் செய்து, அதன் பலனை கண்முன் பார்த்தால் இந்த ஆனந்தம் ஏற்படாதா?

நேஷன் ஆஃப் இஸ்லாம் தலைமையகம் அமைந்திருக்கும் சிகாகோவுக்கு, தலைவரின் பேச்சைக் கேட்க முன்பெல்லாம், குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் சகோதரர்களே சென்று வந்தோம். அப்போதெல்லாம், என்னை அழுத்தி வந்த தாழ்வு மனப்பான்மை இப்போது முற்றிலுமாக என்னை விட்டு அகன்று விட்டது.

இப்போது நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் பேரணி, மாநாடு என்றால் கறுப்பர்கள் குவிந்து விடுகிறார்கள். அப்படி ஒரு மாநாட்டில்தான் நான் திக்குமுக்காடிப் போய் அமைப்பின் வளர்ச்சியை பார்த்து பிரமித்து நின்றேன்.

நியூயார்க் நகரில் இவ்வளவு கறுப்பர்கள் இதுவரை கூடியிருக்கவில்லை. அவ்வளவு கூட்டம். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம்களும், கறுப்பர்கள் அமைப்பாகத் திரள்வதில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட முஸ்லிம் அல்லாத கறுப்பர்களும் சாரை சாரையாக கார்களில் ‘புனித நிக்கோலஸ்‘ அரங்கத்துக்கு அணி வகுத்து வந்தார்கள்.

1959-ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நிகழ்ந்த அந்தக் கூட்டத்தை என்னால் மறக்க முடியாது.

சிறையில் இருந்து வெளியே வந்த நாள் முதல் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் வளர்ச்சிக்காக பிரச்சாரம் செய்து, ஏறக்குறைய இந்த ஏழு ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் புதிய பள்ளிவாசல்களை நிறுவியிருந்தேன். இதுதவிர வேறு பல பள்ளிவாசல்கள் உருவாக என்னுடைய உழைப்பும் இருந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ள, அல்லாஹ் என் மூலம் உதவியிருக்கிறான். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும் போது அறிமுகமான முஸ்லிம் சகோதரர்கள், அந்தப் பகுதிகளில் பள்ளிவாசல்கள் நிர்மாணம் செய்யும் போது நியமிக்கப்பட்டு என்னால் பயிற்சி அளிக்கப்பட்ட தலைமை இமாம்கள், இவர்களை ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பு இந்தக் கூட்டத்தில் கிடைத்தது.

ஒருவரையொருவர் மிகுந்த மகிழ்ச்சியோடு முகமன் கூறி கட்டித் தழுவிக் கொண்டு, பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். அவர்களும் என்னைப் போலவே, கறுப்பர்களின் பிரம்மாண்டமான திரளைக் கண்டு பரவசத்திலும் ஆனந்தக் களிப்பிலும் திளைத்திருந்தனர். பழைய நினைவுகளை மீட்டிக் கொண்டோம்.

கட்டுக்கடங்காத கூட்டத்தை திளிமி தொண்டர்கள் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அதேபோல விநிஜி தொண்டர்கள், முண்டியடித்த பெண்கள் கூட்டத்தை சீர் செய்து இருக்கையில் அமர உதவிக் கொண்டிருந்தனர்.

‘ஒன்றிணைதலில்‘ ஆர்வம் கொண்டிருந்த கறுப்பர்களும் கணிசமான அளவில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். வெள்ளையர்களின் அடிவருடிகளாகவும் தங்களை அறிவுஜீவிகளாகவும் காட்டிக் கொண்ட ஷிஷீ-சிணீறீறீமீபீ கறுப்பின தலைவர்கள் சிலரும்கூட, எங்கள் தலைவர் எலிஜா முஹம்மதுவின் உரையைக் கேட்க ஆவலாக கூடியிருந்தனர்.

எங்கும் கறுப்பு நிறத் தோல்களைக் கொண்ட மனிதர்களின் தலைகள் அலை அலையாக, அந்த அரங்கை நிரப்பிக் கொண்டிருந்தன. வெள்ளையர்களைக் காணமுடியவில்லை.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.