என் புரட்சி

0

22. Fruits Of Islam (FOI) தொண்டர் படை

நான் சந்தித்து வந்த இடர்களை முடிவுக்கு கொண்டு வர ஒரு வழியே இல்லையா என்பதைச் சுற்றியே என் சிந்தனை ஓடியது.

அமெரிக்க கறுப்பர்களின் பிரச்சினைக்கு தீர்வு தனி நாடும், இஸ்லாமும்தான் என்று நேஷன் ஆஃப் இஸ்லாம் பிரச்சாரம் செய்கிறது. இது தீர்வல்ல என்று கருதும், குடியுரிமைகளுக்காகப் போராடும் கறுப்பின தேசியவாதக் குழுக்கள் எங்கள் பிரச்சார வீச்சுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உணர்ந்தேன். இப்படி கறுப்பர்களின் முன்னேற்றத்துக்காக, நலனுக்காக செயல்படும் சமூக இயக்கங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு சாத்தியமே இல்லையா என்று சிந்திக்கும் போது, வழக்கம் போல வரலாற்றின் பக்கம் என் கவனத்தை திருப்பினேன்.

ஆராய்ச்சியாளனுக்கு வரலாறுதான் சிறந்த தீர்வை அளிக்க முடியும். நாம் நமது போராட்ட வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகளைச் சந்தித்தால், இது போன்ற பிரச்சினைகளை வரலாறு எவ்விதம் கையாண்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதில் ஏதேனும் தீர்வு காணப்பட்டிருக்கலாம் அல்லவா?… அல்லது சிக்கலிலிருந்து விடுபடும் வழிகளாவது நமக்கு தென்படலாம்.

அப்படிச் சிந்திக்கும் போது, எனக்கு சற்றென நினைவுக்கு வந்தது கடந்த ஆண்டு நடைபெற்ற பாண்டூங் மாநாடுதான். 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை இந்தோனேசியாவின் பாண்டூங் நகரில் பிரம்மாண்டமான ஆசிய, ஆஃப்ரிக்க நாடுகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. அண்மையில் சுதந்திரம் அடைந்த 29 ஆசிய,- ஆஃப்ரிக்க நாடுகள் முதன்முதலாக ஒன்றிணைந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.