எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விரைவில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0

தமிழகத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் படி சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.  அதனால் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும் மற்ற மாவட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் மீதுள்ள வழக்குகளை அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்கள் விசாரிக்கவும், மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்து சென்னை உயர்நீதி மன்றம் பதிவுத்துறைஅறிவித்துள்ளது.

சிறப்பு நீதிமன்றங்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் மீதான வழக்குகளை தினமும் விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும், வழக்குகளை விசாரித்து வரும் மாவட்ட முதன்மை நீதிபதிகள், மாதந்தோறும் அதுகுறித்த விவரங்களை அறிக்கையாக உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பவும் உத்தரவுவிடப்பட்டுள்ளது.

Comments are closed.