எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் அமெரிக்கா!

0

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் அமெரிக்கா!

‘யானைகள் விளையாடினாலும் சண்டையிட்டாலும் சேதம் என்னவோ பயிர்களுக்குத்தான்’ என்பார்கள். ஈராக்கின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் தங்கள் பலத்தை சோதித்து பார்க்கும் களமாக ஈராக்கை மாற்றியுள்ளன. ஈரானின் குத்ஸ் படையின் தலைவர் காஸிம் சுலைமானியை ஜனவரி 3 அன்று அமெரிக்கா படுகொலை செய்தது இந்த முறுகல் நிலையை அதிகரித்துள்ளது.

ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் வெளிநாட்டு பிரிவு என்று குத்ஸ் பிரிவை குறிப்பிடலாம். ஃபலஸ்தீனின் ஜெரூஸலத்தை இஸ்ரேலிடமிருந்து முழுமையாக மீட்க வேண்டும் என்பது இந்த பிரிவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. பின்னர் வெளிநாடுகளில் ஈரான் ஆதரவு குழுக்களை உருவாக்குவதும் அவற்றை பயிற்றுவிப்பதும் இதன் நோக்கமானது. யெமனின் ஹூத்தி படையினர் மற்றும் ஈராக்கில் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு அனைத்து உதவிகளையும் குத்ஸ் படை வழங்கி வருகிறது. பெருமளவில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்ற போதும் அவற்றை ஒடுக்கி, சிரியாவின் அதிபர் பஷர் அல் அஸத் இன்னும் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு குத்ஸ் படையின் உதவி முக்கியமானது. லெபனானின் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஃபலஸ்தீனின் இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியிலும் இதன் பங்களிப்பு முக்கியமானது. இந்த படையை ஏறத்தாழ இரண்டு தசாப்தங்கள் வழிநடத்தியவர் காஸிம் சுலைமானி. போர்க் களத்தில் ராக்கெட் லாஞ்சருக்கு அருகில் நின்று போஸ் கொடுத்த சுலைமானி ட்விட்டரில் ட்ரம்பிற்கு பதிலடி கொடுப்பதற்கும் தவறவில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.