எல்லையில் இராணுவ வீரர்களின் பரிதாப நிலை: BSF வீரரை தொடர்ந்து CRPF வீரர் புதிய புகார்

0

ஜம்மு கஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த தேஜ் பகதூர் என்கிற வீரர் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வசிதிகளின் மோசமான நிலையை சமூக வலைத்தளம் வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினார். இந்த புகாருக்கு பதிலளித்த இராணுவத் தரப்பு அவர் கூறிய குறைபாடுகளை களைய முயற்சிக்காமல் புகாரளித்த வீரரின் நடத்தையை குறை கூறியது.

தற்போது மத்திய ரிசர்வ் போலிஸ் படையில் பணியாற்றும் மற்றொரு வீரரான ஜீத் சிங் என்பவர் தங்களுக்கும் இராணுவத்தினருக்கு இணையான வசதிகளை வழங்குமாறு சமூக வலைத்தளம் மூலம் நாட்டு மக்களுக்கும் பிரதமருக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் தனது வீடியோ பதிவில், தங்களின் ரிசர்வ் போலிஸ் படை 24 மணி நேரமும் சிறப்பான பணியை செய்து வருவதாகவும் ஆனால் தங்களுக்கு வழங்கப்படும் வசதிகளில் பாராபட்சம் காட்டப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தங்களுக்கு கேண்டீன் வசதிகள் தரப்படுவதில்லை என்றும் மருத்துவ வசதிகள் தரப்படுவதில்லை என்றும் தங்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் தங்களுக்கு விடுமுறைகள் கூட சரியான நேரங்களுக்கு கிடைப்பதில்லை என்று கூறிய அவர் தங்களின் பணிகள் மட்டும் அதிகபட்சமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்திய இராணுவத்தினருக்கு வழங்கும் வசதிகள் குறித்து தங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் தங்களுக்கு ஏன் இத்தகைய பாராபட்சம் காட்டப்படுகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தங்களின் குறைகளை எடுத்துக் கூறுவதற்கு எவரும் இல்லை என்றும் தங்களின் கடமையை செய்த பின்னரும் தங்களுக்கு இந்த உரிமைகள் கூட இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தங்களுக்கு ஓய்வூதியம் நிருத்தப்பட்டுவிட்ட காரணத்தால் தங்களின் பணி முடிந்து 20 வருடம் கழித்து தாங்கள் எங்கே செல்வது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்று வீரர்கள் தங்களின் குறைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரியபப்டுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு கேடு விளைவிக்கும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ தளபதி பிபின் ரவாத் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வீரர்கள் தங்களின் புகார்களை உள்கட்டமைப்புகள் மூலம் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும் தன்னிடம் நேரடியாகவும் கூறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.