ஏன் குடிநீர் தரவில்லை என்று கேட்டதனால் இரண்டு முஸ்லிம் பயணிகள் விமாத்தில் இருந்து வெளியேற்றம்

0

அமெரிக்க அரசிற்கு பணியாற்றும் இரு முஸ்லிம் பயணிகள் விமானத்தில் காக்க வைக்கப்பட்டிருந்த போது ஏன் குடிநீர் தரப்படவில்லை என்று தங்களுக்கிடையே கேள்வி எழுப்பியதனால் அந்த விமானத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அரசு உதவி பெற்ற செய்தி நிறுவனமான வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வில் செய்தியாளராக பணியாற்றி வரும் நியாலா முஹம்மத் மற்றும் அமெரிக்க அரசு பணியில் இருக்கும் அவரது தோழியும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கள் பயணத்தை துவங்க இருந்தனர்.

விமானத்தில் தாங்கள் சுமார் ஐந்து மணி நேரமாக காக்க வைக்கப்பட்டிருந்தும் தங்களுக்கு குடிநீர் கூட வழங்கபடாதது குறித்து நியாலாவின் தோழியும் மற்றொரு பயணியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது விமானாத்தில் சேவை புரியும் ஆண் ஒருவர் இவர்களிடம் வந்து “உங்களுக்கு ஏதாவது பிரச்சனையெனில்  நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கிக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். மேலும் அவர்கள் விமானத்தில் இருப்பது மற்ற பயணிகளுக்கு அசெளகரியமாக உள்ளது என்றும் அவர்களை விமானத்தில் இருந்து வெளியேற்றிவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

நியாலாவின் தோழி அந்த நபரை கவனித்துள்ளார். அவர் தனது பெயர் பட்டையை அணியாமலும் அவரது பெயர் கேட்கப்பட்டதற்கு பதில் கூறாமலும் இருந்தததால் அவது புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.
உடனே விமானத்தில் படம் எடுப்பது சட்டப்படி குற்றம் என்றும் உடனே அந்த படத்தை அழிக்குமாறும் அவர்கள் கேட்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அமெரிக்கன் விமான பயணிகள் உறவு அதிகாரி ஒருவர் அங்கு வந்து இரவரும் தங்களை பின் தொடருமாறு கூறியுள்ளார். அவருடன் இருவரும் சென்ற போது ஆயுதம் தாங்கிய காவலர்கள் இவர்களுக்காக காத்துக்கொண்டு இருந்துள்ளனர். இந்த இருவரால் விமான சேவகர் அச்சுருத்தப்படுள்ளதாக காவலர்கள் இவர்களிடம் கூறியுள்ளனர்.

இது குறித்து நியாலா கருத்து தெரிவிக்கையில், விமானத்தில் நடந்தவை குறித்து அமெரிக்க விமான பயணிகள் உறவு அதிகாரியிடம் எடுத்துரைத்தும் தாங்கள் விமானத்தில் வைத்து அவமானப் படுத்தப்பட்டதாக உணர்கிறோம் என்று கூறியுள்ளார்.  இவர்களை விமானத்தில் இருந்து அழைத்துச் சென்ற விமான காவலர்கள் பின்னர் இவர்களுடம் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து அமெரிக்க விமான செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமான சேவகர் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டும் பயணிகள் அவரை படமெடுத்துள்ளனர். இது விமான விதிமுறைகளை மீறுவதாகும் என்று கூறியுள்ளார். இது ஒத்துழையாமை தொடர்பான பிரச்சனை, இங்கே எந்தவித பாகுபாடும் காட்டப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள நியாலா, அமெரிக்கன் விமான சேவை தங்கள் தவறுக்கு பொறுப்பேற்று கொள்ளாதது குறித்தும், மோசமாக நடந்து கொண்ட விமான சேவகர் மீது எந்ததவித நடவடிக்கை எடுக்காததும் தனக்கு மிகவும் ஏமாற்றமாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தான் அவமானப்படுத்தப் பட்டதாக உணர்வதாகவும் விமான சேவை கூறும் ஒத்துழையாமை என்பது வெறும் பொய் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது போல் பாரிஸ் இல் அமெரிக்க முஸ்லிம் தம்பதியர் இருவர் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளனர். இவர்களால் விமாப் பணிப்பெண் அசெளகரியமாக உணர்ந்தார் என்று காரணம் கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு நாள் முழுவதும் காத்திருந்து வேறு ஒரு விமானம் மூலம் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த விமான சேவையும் சொல்லி வைத்தார் போல தாங்கள் தங்களது பயணிகளிடம் வயது, இனம், தேசியம், மந்தம், பாலினம், முதலியவற்றில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை என்று பதில் அளித்துள்ளது.

முஸ்லிம் என்பதால் விமானத்தில் குளிர்பானம் கொடுக்கப்படாமல் இருந்த நிகழ்வுகளும் அமெரிக்க விமானங்களில் நிகழ்ந்துள்ளது இது போன்ற சம்பவங்களின் உண்மை முகத்தினை நமக்கு விளக்குகிறது.

Comments are closed.