ஏமனில் இருந்து சவுதி கூட்டணி படையினர்கள் வெளியேற வலியுறுத்தல்!

0

ஏமனில் இருந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படையினர் வெளியேற வேண்டும் என அலி அல்-ஹூதி கிளர்ச்சிப் படைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏமனில் அரசு ஆதரவுப் படையினருக்கும் அலி அல்-ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஆதரவுப் படையினருக்கு ஆதரவாக சவுதி  தலைமையிலான கூட்டணி நாடுகளின் படைகள் சண்டையிட்டு வருகின்றன.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி செய்து வருகிறது. இந்நிலையில் ஹூதி கிளர்ச்சிப் படை தலைவர் முகமது அலி அல் ஹூதி தெரிவிப்பதாவது: “ஆக்கிரமிப்பு, வான்வெளித் தாக்குதல் ஆகியவற்றை ஏமன் குடியரசு ஏற்காது. ஆகையால், ஏமனில் இருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் நாட்டில் இருந்து முதலில் வெளியேற வேண்டும் என்றார். ஏமனில் சண்டையிட்டு வரும் சவுதி தலைமையிலான கூட்டணிப் படையில் ஐக்கிய அரபு அமீரகம் நாடும் உள்ளது. இந்த நிலையில், சவுதி தலைமையிலான கூட்டணிப் படையினர் அனைவரும் ஏமனில் இருந்து வெளியேற வேண்டும்” என்று ஹூதி கிளர்ச்சிப் படைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

சவுதி மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் 3 முறை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave A Reply