ஏர்டெல் நிறுவனத்தின் ஆதார் eKYC உரிமம் ரத்து: வாடிக்கையாளர்கள் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக புகார்

0

ஏர்டெல் நிறுவனம் ஆதார் தளத்தை பயன்படுத்துவதில் இருந்து UIDAIவால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இது அந்நிறுவனம் தங்களது ஏர்டெல் வங்கிக் கணக்கு சேவைக்கு வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்களின் ஆதார் eKYCயினை பயன்படுத்தியதால் என்று கூறப்படுகிறது.

சிம் வார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆதார் தகவலை வைத்து ஏர்டெல் வங்கிக் கணக்கை துவங்கி அதனை சமையல் எரிவாயு மானியங்களை பெறுவதற்கு பயன்படுத்தியுள்ளது. இதற்கும் UIDAI கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக UIDAI பிரப்பித்துள்ள இடைக்கால உத்தரவில் “பார்தி ஏர்டெல், மற்றும் ஏர்டெல் வங்கிக் கணக்குகளின் eKYC உரிமம் உடனடியாக தற்காலிக சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.’ என்று கூறியுள்ளது.

UIDAI இன் இந்த உத்தரவினால் ஏர்டெல் நிறுவனத்தால் மொபைல் சிம் கார்டு சரிபார்த்தலுக்கு ஆதார் எண்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்துடன் ஏர்டல் வங்கியில் இனி புதிய கணக்கு துவங்குகையில் அதனை ஆதார் மூலமாக சரி பார்க்க இயலாது.

இது குறித்து ஏர்டல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரை பத்திரிகையாளர் அணுகிய போது, “UIDAI இடம் இருந்து எங்களுக்கு ஆதார் தொடர்பான எங்களின் ekYC சரிப்பார்த்தல் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைதுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும், இந்த நிலை விரைவில் சீரடைய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும், அனைத்து சட்டதிட்டங்களின்படி நடப்பது தங்களுக்கு மிக முக்கியமானது என்றும் இதற்கிடையில் பயனாளர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல்லின் இந்த செயல் மூலம் சுமார் 23 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் ஏர்டல் கணக்குகளில் அவர்களின் சமையல் எரிவாயு மானியத் தொகையாக சுமார் 47 கோடி ரூபாய் அவர்களுக்கு தெரியாமலேயே வரவு வைக்கப்பட்டுள்ளது. இது அத்தனையும் தங்களது வாடிக்கையாளர்கள் மத்திய அரசின் உத்தரவின் படி தங்களது மொபைல் எண்களை ஆதாருடன் இணைக்க ஏர்டெல் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஆவணங்களை வைத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஏர்டெலின் eKYC உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஏர்டெல் நிறுவனத்தின் அமைப்பு மற்றும் முறைகள் குறித்து அவை ஆதார் சட்டத்திற்கு உட்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க UIDAI உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய ஏர்டெலின் இந்த விதி மீறல் ஆதார் சட்டத்தின் பல பிரிவுகளை மீறியுள்ளதால் ஏர்டெல் நிறுவனத்திற்கு நாள் ஒன்றிக்கு ரூபாய் ஒரு லட்சம் கணக்கிட்டு அபராதத் தொகை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதார் தகவல்கள் மிக பாதுகாப்பானது என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் மக்களிடம் இருந்து ஆதார் தகவல்களை பெரும் நிறுவனங்கள் அதனை இது போன்று தவறாக பயன்படுத்தாதவாறு முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் இருப்பது மத்திய அரசு கூறும் ஆதார் தகவல்கலின் பாதுகாப்பு எத்தகையது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

Comments are closed.