ஏர்வாடி படுகொலை:சிபிஐ, சிபிஐ (எம்), எஸ்டிபிஐ, மதிமுக, விசிக கூட்டறிக்கை

0

நெல்லை ஏர்வாடியை சார்ந்த 24 வயது ஹாஜா முகைதீன் என்ற இளைஞர் சமூக விரோத கும்பலால் கடந்த 21.12.2015 அன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனை மதிமுக, சி.பி.ஐ.(எம்), எஸ்.டி.பி.ஐ, சி.பி.ஐ., வி.சி.க., ஆகிய கட்சிகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

மழை, வெள்ள நிவாரண பணிகளில் சாதி, மத பேதமற்ற முறையில் மக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டனர்.இத்தகு ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஏர்வாடி சம்பவம் நிகழ்ந்துள்ளது என கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம்.

ஏர்வாடி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நிலவி வந்தது. இதனை மனதில் கொண்டு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்பதையும் பதிவு செய்கிறோம்.இச்சூழலில் உயிரிழந்த ஹாஜா முகைதீன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நெல்லை மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் சாதி, மத உணர்வுகளை தூண்டும் சமூக விரோத கும்பல் மீது உரிய, விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

இப்படிக்கு

கே.எஸ்.சாகுல் ஹமீது உஸ்மானி
மாவட்ட தலைவர், SDPI கட்சி

K.M.A.நிஜாம்
மாவட்ட செயலாளர், மதிமுக

K.G.பாஸ்கரன்
மாவட்ட செயலாளர், CPI(M)

S.காசி விஸ்வநாதன்
மாவட்ட செயலாளர், CPI

M.C.கார்த்திக்
மாவட்ட செயலாளர், வி.சி.க

ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்

 

Comments are closed.