ஏ.பி.வி.பி. யினருடன் மோதல்: மாயமான JNU மாணவன் நஜீப் அஹமத்.

0

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பயோடெக்னாலஜியில் Msc பயின்று வரும் மாணவரான நஜீப் அஹமத் என்பவர் கடந்த சனிக்கிழமையில் இருந்து மாயமாகியுள்ளார். சனிக்கிழமை இரவு இவர் ஏ.பி.வி.பி அமைப்பினர் சிலருடன் மோதலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பல்கலைகழக விடுதியில் சேர்ந்த நஜீப் அஹமதிற்கும் விடுதியில் உணவக கமிட்டி தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வந்த ஏ.பி.வி.பி. அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நஜீப் ஒரு மாணவரை அறைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாணவர்களின் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பழிதீர்க்க ஒரு கும்பலுடன் வந்த ஏ.பி.வி.பி.யினர் நஜீபை கடுமையாக தாக்கியதாக சில மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து நஜீபை காப்பாற்ற முயன்ற வார்டன், JNU மாணவர் அமைப்பு தலைவர் மற்றும் விடுதியில் தங்கியிருப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் தாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நஜீப் மர்மான முறையில் காணாமல் போயிருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. JNU மாணவர் அமைப்பு சார்பாக இவ்விஷயத்தில் பல்கலைகலம் காவல்துறையில் புகாரளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நஜீபின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் IPC பிரிவு 365  இன் கீழ் (ஒருவரை தவறாக சிறைபிடிக்கும் ரகசிய நோக்கத்தோடு கடத்திச் செல்வது) வசந்த் குஞ் வடக்கு காவல்நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.