ஐபிஎல் போட்டியில் மோடிக்கு எதிராக கூச்சலிட்ட எம்.எல்.ஏ.வின் மகன்

0

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கூச்சலிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன்!

பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டியில் பிரதமர் மோடிக்கு எதிராக கூச்சலிட்டு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் சாந்திநகர் சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நலபாட் அகமது ஹாரிஸ். இவரது மகனான முகமது நலபாட், ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண சென்று இருந்தார். அப்போது சவுகிதார் ஒரு திருடன் என்று பிரதமர் மோடிக்கு எதிராக கூச்சலிட்டார்.  இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

Comments are closed.