ஐ.எஸ். இயக்க தீவிரவாதி என்று 16 வயது சிறுவன் கைது

0

உத்தர பிரதேசத்தின் குஷிநகர் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுவனை ஐ.எஸ். இயக்க தீவிரவாதி என்று கைது செய்துள்ளது மும்பை தீவிரவாத எதிர்ப்பு படை. 12 வகுப்பு மாணவனான அவரை 20 வயதுடையவர் என்று தீவிரவாத தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்த 12 வகுப்பு மாணவன் ஐ.எஸ் தீவிரவாதிகள் கூடுவதற்கும் பயிற்சி எடுப்பதற்கும் இடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளான் என்றும் ஹவாலா பணம் மூலம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் பல இடங்களை வாடகைக்கு எடுத்துள்ளான் என்றும் அவன் மீது குற்றம் சாட்டியுள்ளது தீவிரவாத தடுப்பு பிரிவு.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்ட 14 நபர்களில் பலர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இவர்களில் பலரின் கைது தீவிரவாத தடுப்பு பிரிவின் நம்பகத்தன்மையின் மேல் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

(பார்க்க செய்தி:
என் கணவர் தலையில் துப்பாக்கி வைத்து என்னிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கினர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ். அமைப்பினரா?)

மேலும் தற்பொழுது 16 வயது சிறுவனை ஐ.எஸ். தீவிரவாதி என்று கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் குற்றச்செயலில் ஈடுபடும் 16 வயதடைந்த சிறுவர்களை பெரியவர்களாக கருதி தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காக சிறார்களின் வயதை 18 இல் இருந்து 16 ஆக குறைத்து சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.