ஐ.எஸ்.சிற்கு ஆள் சேர்க்கும் பா.ஜ.க.?

0

ஐ.எஸ்.சிற்கு ஆள் சேர்க்கும் பா.ஜ.க.?

அஸ்ஸாமின் நல்பாரி பகுதியில் திடீரென்று தோன்றிய ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியுடன் ஐஎஸ் இல் இணையுங்கள் என்ற எழுதப்பட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அம்மாவட்ட காவல்தறை நடத்திய விசாரணையில் பாஜக உறுப்பினர் உட்பட ஆறு பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து விசாரித்த காவல்துறையினர் தங்களுக்கு கிடைத்த சில தகவலின் அடிப்படியில் இவர்களை காவலில் வைத்துள்ளதாகவும் ஆனால் இவர்கள் இதுவரை ஏதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் மற்றும் நடப்பு பாஜக வின் மாவட்ட உறுப்பினர் தபான் பார்மன், முசம்மில் அலி, முன் அலி, புலக் பார்மன், திப்யோதி தாகுரியா மற்றும் சருஜோதி பைஷ்யா ஆகியோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் பெல்சொர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எவரையும் காவல்துறை கைது செய்யவில்லை. மேலும் இந்த செயலில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளை கண்டறியும் பணிகளை நல்பாரி காவல்துறை முடிக்கிவிட்டுள்ளது.

Comments are closed.