ஐ.நா வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா!

0

லெபனானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷாகீத் என்ற அமைப்பை ஐ.நாவில் சேர்ப்பதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஷாகீத் அமைப்பை உறுப்பினராக்கலாமா? கூடாதா? என்ற வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி, ஐ.நாவின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு வாக்களித்தமைக்கு நன்றி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேடனியஹு மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் துணை தூதர் மயா கடோஷ் தங்களது ட்விட்டரில் பதிவிட்ட பிறகுதான் இந்த ஆதரவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Comments are closed.