ஒடுக்கப்படும் ஊடக சுதந்திரம்: உதவிக்கு வந்த இணையதளம்

0

பிரபல செய்தி தளமான தி வயர் இணையதளத்தில் வெளியான இரு கட்டுரைகளை நீக்கக் கூறி சமீபத்தில் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகா ராஜிய சபா உறுப்பினர் சந்திரசேகர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை அடுத்து  நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த சந்திரசேகர் கர்நாடகாவில் சுயேட்சையாக வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கேரளா தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் முதல் கட்டுரையானது ஜனவரி மாதம் 25 ஆம் தேதி தி வயர் தளத்தில் வெளியான அர்னாப் கோஸ்வாமியின் தி ரிபப்ளிக் டிவி குறித்த சந்தீப் பூஷனின் கட்டுரையாகும். இந்த செய்தி நிறுவனத்தை அர்னாப் கோஸ்வாமியுடன் சந்திரசேகர் இணைந்து துவக்கவுள்ளார்.

இரண்டாவது பிப்ரவரி 17 ஆம் தேதி சச்சின் ராவின் கருத்து கட்டுரையாகும். இது சந்திரசேகர் பாராளுமன்ற பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருந்து கொண்டே பாதுகாப்பு நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து எழுதப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி, இந்த கட்டுரைகளை தி வயர் நிறுவனம் வெளியிடுவதற்கு சந்திரசேகரின் வழக்கறிஞர் தடை உத்தரவு பெற்றார். இந்த தடையானது எதிர் தரப்பினரின் கருத்துக்களை கேட்காமல் பெறப்பட்ட தடை உத்தரவாகும். இந்த தடை உத்தரவை பெங்களுருவில் உள்ள சிவில் நீதிமன்றம் பிரபித்துள்ளது.

இக்கட்டுரைகள் மீதான தடை உத்தரவு குறித்து சந்திரசேகர் கருத்து தெரிவிக்கையில், இந்த கட்டுரைகள் தன் மீதான காங்கிரஸ் கட்சி மற்றும் அது சார்ந்த ஊடங்கங்களின் தாக்குதல்கள் ஆகும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த நீதிமன்ற உத்தரவு என்பது அந்த கட்டுரைகளை அகற்றுவதற்காக மட்டுமல்ல, அதனை பிரசுரித்தவர்களை அவர்களின் செயல்களுக்கு குற்றம் பிடிப்பதும் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

இது போன்ற உத்தரவுகளை எதிர்காவிட்டால் இது அரசியல்வாதிகளுக்கும் இன்ன பிற சக்திவாய்ந்தவர்களுக்கும் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்க ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று வயர் நிறுவனத்தின் வரதராஜன் கூறியுள்ளார். மேலும் தங்களை காங்கிரசுடன் இணைந்து செயல்படும் ஊடகம் என்று சந்திரசேகர் கூறுவது நகைபிற்குரியதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க இந்த கட்டுரைகள் தி வயர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் archive.is என்ற இணையதளத்தில் இது மீண்டும் பதிவாகியுள்ளது. இந்த தளமானது இணையதள பக்கங்களை பிரதி எடுத்து வைத்துக்கொள்ளும் தளமாகும். தற்போது நீக்கப்பட்ட கட்டுரைகளை கூகிளின் பக்கத்தில் இல் இருந்து எடுத்து அதனை archive.is தளத்தில் சிலர் பதிவேற்றியுள்ளனர். தற்போது இந்த தளத்தில் இருந்தும் இச் செய்திகளை அகற்ற வேண்டுமானால் செக் ரிபப்ளிக் நீதிமன்றத்தில் இதற்கு தடை பெற வேண்டியிருக்கும். அதற்கு வாய்ப்புக்கள் மிகக் குறைவு.

தி வயரில் இருந்து நீக்கப்பட்ட இரு கட்டுரைகள் தற்போது கீழ்க்கண்ட முகவரியில் காணக் கிடைகின்றன

http://archive.is/ayuDs

https://archive.is/ODFIC

Comments are closed.