ஒரே தேசம் – ஒரே தேர்தல்: சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தின் கடைசி மைல்கல்

0

ஒரே தேசம் – ஒரே தேர்தல்: சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தின் கடைசி மைல்கல்

-ரிழா

இந்தியாவின் பிரதமர் யார்? இந்தக் கேள்விக்கு நரேந்திர மோடி என நீங்கள் பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால் மோடி இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்.

ஆமாம். இந்தியாவின் பிரதமர், தான் என்பதை அவர் ஒப்புக்கொள்வதில்லை. இந்தியாவின் ‘முதல் பிரதமரே’ நான்தான் என்பதில்தான் அவர் பெருமை கொள்கிறார். அவரின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன. இதன் பிரதிபலிப்புதான் ‘புதிய இந்தியா’ பிரசவ அறிவிப்புகளெல்லாம்.

காலனியின் பிடியிலிருந்து விடுதலை அடைந்த தேசம் ஒன்று, பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை அடைய, எதிர்க்கட்சிகளின் அரசியல் தலையீடுகளை விரும்புவதில்லை. இருந்தாலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட சிறந்த அரசியல் ஆளுமைகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையும் செவி தாழ்த்திக் கேட்டு, நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதை வரலாற்றில் பார்க்கலாம். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் அணுகுமுறைகள் இதற்கு சிறந்த உதாரணம்.

ஆனால் நரேந்திர மோடியோ, எந்த எதிர்க்கட்சியும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு, தான் பிரதமராக உள்ள புதிய இந்தியா, தன் மூளையில் உள்ள சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். மத்திய பா.ஜ.க.-வின் நான்கு ஆண்டு ஆட்சி இதனையே தெளிவாகக் காட்டுகிறது. கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா ஒரு சுதந்திர தேசமாகத்தான் இருந்தது என்பதையோ, காங்கிரஸ் கட்சி இந்தியாவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது என்பதையோ ஒப்புக்கொள்ள மோடி மறுக்கிறார். அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பா.ஜ.க., வாஜ்பாயி ஆட்சியின் போது செய்ய முடியாததை எல்லாம், இந்த முறை செய்து முடிக்க வேண்டும் என்ற கங்கனத்தோடு கச்சிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.