ஒரே தேசம் தேர்தல்?

0

ஒரே தேசம் தேர்தல்?

“ஒரே” என்ற வார்த்தையின் மீது ஒரு மோகம் ஊட்டப்படுகிறது. அந்த மோகம் “ஒரே” என்ற வார்த்தைக்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களின் மீதான விசுவாசமாக மாற்றப்படுகிறது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்றெல்லாம் வற்புறுத்தப்படுவதன் தொடர்ச்சியாக நடைமுறையில் ஒரே தேர்வு கொண்டுவந்துவிட்டார்கள், ஒரே கல்விக்கொள்கையைக் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் அவ்வப்போது கிளப்பப்பட்டு இப்போது மறுபடியும், ஏதோ இதுவே நாட்டின் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு என்பது போல கடைவிரிக்கப்பட்டிருப்பது “ஒரே தேசம் ஒரே தேர்தல்” என்ற கருத்தாக்கம். அதாவது நாடாளுமன்ற மக்களவைக்கும் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகப் பகுதிகளின் சட்டமன்றங்களுக்கும் ஒரே கால அட்டவணையில் தேர்தல்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 19 அன்று இது தொடர்பான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இப்படி கூட்டப்பட்டதே கூட, ஏதோ ஆட்சியாளர்களின் ஜனநாயக மாண்பிலிருந்து வந்ததல்ல, தேர்தல் தொடர்பான அடிப்படை மாற்றங்களுக்கு  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.