ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு

0

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் சேருவதற்கு தயார்’ என்று அறிவித்திருக்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ். டெல்லியில் நடைபெற்ற மத்திய உணவு அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில்தான் இவ்வாறு அறிவிப்பு செய்திருக்கிறார். வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் தமிழகம் இந்த திட்டத்தில் இணையும் என்ற உறுதியையும் கொடுத்திருக்கிறார். ‘இந்த திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும். இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை’ என கூட்டுவுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது குறிப்பிட்டார். தமிழக அமைச்சர்கள் தொடர்ச்சியாக இந்த திட்டத்திற்கு ஆதரவாக பேசி வருவதை பார்க்கும்போது தமிழக அரசு இந்த திட்டத்திற்கு தெரிவித்து வந்த எதிர்ப்பு முடிவுக்கு வருவதுபோல் தெரிகிறது.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தினால் பயனாளிகள் ஒரே ஒரு விநியோகக் கடையை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சொந்த ஊர் விட்டு வேறு இடம் சென்றாலும் அவர்களின் அருகில் இருக்கும் விநியோகக் கடையிலேயே அவர்களுக்கான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். வேலை தேடி வேறு இடங்களுக்கு செல்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றார்கள். அதேபோல் போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். பொது விநியோக முறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதை பறித்து தனதாக்கிக்கொள்ளும் முயற்சியே இந்த திட்டம் என்று எதிர்கட்சிகள் சொல்கின்றன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.