ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரம் – பாப்புலர் ஃப்ரண்ட்

0

பத்திரிகை செய்தி

ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரம் – பாப்புலர் ஃப்ரண்ட் செயலக குழு தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக செயலக குழு கூட்டம் மாநில தலைவர் M.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் தலைமையில் மதுரையில் 09.02.2018 அன்று கூடியது. மாநில துணைத்தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி, மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது உட்பட அனைத்து செயலக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

தீர்மானம் 1: ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் பிரச்சாரம் – பாப்புலர் ஃப்ரண்ட் செயலக குழு தீர்மானம்!

பிப்ரவரி 17 – பாப்புலர் ஃப்ரண்ட்-ன் துவக்க தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், மக்கள் தொடர்பு பிரச்சாரங்கள் என ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் பிப்ரவரி 11 முதல் 17 வரை பாப்புலர் ஃப்ரண்ட் இந்த தேசத்திற்கும், மக்களுக்கும் ஆற்றிவரும் அரும்பணிகள் குறித்து மக்களிடம் எடுத்தியம்பும் விதமாக மாபெரும் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக பிப்ரவரி 11 அன்று ஒரே நாளில் 10 இலட்சம் மக்களை வீடு வீடாக சென்று சந்திக்கும் மாபெரும் மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை நடத்துவது என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் சமூக பணிகள் மற்றும் போராட்டங்கள் குறித்த துண்டு பிரச்சுரம் மக்களுக்கு விநியோகித்து வீடு வீடாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 2: முஸ்லிம் சிறைவாசிகள் எந்த பாரபட்சமும் இல்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும்.

தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் சிறைவாசிகள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுவார்கள் என்ற மிகச்சிறந்த அறிவிப்பை வெளியிட்டு சோகமே வாழ்க்கையாக தங்கள் வாழ்நாளை கழித்து வரும் சிறைவாசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அம்மையார் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதியை முன்னிட்டு விடுதலை செய்யப்படக்கூடியவர்களின் பட்டியல் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் 10 ஆண்டுகள் சிறையில் கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளும் பாரபட்சமில்லாமல் விடுவிக்கப்பட வேண்டும், குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் எந்த பாரபட்சமும் இல்லாமல் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் போன்றோர் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழக அரசை இந்த செயலக குழு கேட்டுக்கொள்கின்றது.

இப்படிக்கு
A. ஹாலித் முஹம்மது,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Comments are closed.