ஒரே நீதிபதி தேர்வு – திமுக எதிர்ப்பு

0

மாவட்ட நீதிபதிகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடத்த திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அரசு ஒரே நாடு ஒரே நீதிபதி தேர்வு என அகில இந்திய மாவட்ட நீதிபதி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதை சுட்டி காட்டினார். வேறு மாநில நீதிபதிகளை இங்கு நியமிக்கும் போது மொழிப் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும். ஹிந்தி பேசும் மாநில நீதிபதிகள் தமிழகத்தில் நியமிக்கும் நிலை ஏற்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மாநில நீதிபதிகள் செஷன்ஸ் நீதிபதி பணி உயர்வு என பல்வேறு பிரச்சனைகள் எழும் என்பதால் இதனை மாநில அரசு எதிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முன்னதாக மத்திய பாஜக அரசின் புதிய திட்டமான ஒரே நாடு! ஓரே தேர்தல்! ஒரே ரேசன்! என்ற திட்டத்தை போலவே, இந்த “ஒரே நீதிபதி தேர்வு” திட்டமும் மாநிலங்களுடைய உரிமைகளையும் அடையாளங்களையும் அழிக்கக்கூடியதாக இருக்கின்றன. 

மேலும் பல்வேறு அதிகாரங்களை மத்திய பாஜக அரசு கையில் எடுத்துக்கொண்டு மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. மக்கள் தங்களுடைய தேவைகளை உடனடியாக தீர்மானிக்ககூடிய மாநில ஆட்சியை தேர்வு செய்துக்கொண்டுருந்ததை முடக்குவதற்கு மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

Comments are closed.