கஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை

0

ஜம்மு கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து 370-ஐ பாஜக அரசு  கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அதன் பின்னர் காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் கஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

அன்றிலிருந்து, இன்றுவரை காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்க்ள் கோரிக்கை வைத்தும் பாஜக அரசு கண்டுக்கொள்ளமால் இருந்து வருகிறது.

இதனால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன: அதில்ம, “தேசியவாத காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ், மார்க்ஸிஸட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம்,  யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி” ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனநாயக வேறுபாடுகள் திணிக்கப்படுவதால், அரசியலமைப்பின் அடிப்படை கொள்கை நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களே தவிர, தேச நலனுக்கு எதிரானவர்கள் அல்ல.

இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் உறுதி அளித்துள்ள உரிமைகள் மற்றும் கஷ்மீர் மக்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல்” என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.