ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பாஜக வழக்கறிஞர்

0

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பாஜக வழக்கறிஞர்

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் 12 வயதிற்கு கீழான குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை இயற்றபட்டுள்ளது. இதே நாளில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயிலில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் 57 வயது வழக்கறிஞர் K.P.பிரேம் ஆனந்த்.

2006 ஆம் ஆண்டு R.K.நகர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க உறுப்பினர் அட்டையையும் தன்னுடன் வைத்துள்ளார். இவர் இரவு சுமார் ஒரு மணியளவில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் ரிசர்வேஷன் செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டியில் ஏறியுள்ளார். அப்போது ஒரு பிரிவில் நடு படுக்கையில் படுத்திருந்த சிறுமிக்கு கன்னத்தில் முத்தமிட்டு அச்சிறுமியின் நெஞ்சை அவர் அமுக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அச்சிறுமி முதலில் இவரை தன்னை விட்டு தள்ளியுள்ளார். பின்னர் மீண்டும் அந்த அசிருமியிடம் அவர் அத்துமீரவே அச்சிறுமி கூச்சலிட்டு நடந்தவற்றை தனது பெற்றோரியம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சிறுமியின் பெற்றோரும் சக பயணிகளும் குடி போதையில் இருந்த பிரேம் ஆனந்தை ரயில் பெட்டியின் கழிவறை அருகே இழுத்துச் சென்றுள்ளனர். ரயில் TTE யிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினரும் அங்கு சென்றுள்ளனர். இந்த குற்றச்செயல் கோவை மற்றும் ஈரோட்டிற்கு நடுவே நடைபெற்றதால் ஈரோடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஈரோடு காவல்துறையிடம் பிரேம் ஆனந்த் ஒப்டைக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தை காவல்துறை மிக சாதாரணமானதாக எடுத்துக் கொண்டது போல தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை வெறுமனே தொட்டுள்ளார் என்று கூறியதாகத் தெரிகிறது. மேலும் பிரேம் ஆனந்த் ஒரு வழக்கறிஞர் என்றும் ஆனால் அவருக்கு பாஜகவுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இன்னும் தகவல் ஏதும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள தகவலின்படி 2006 தேர்தலில் R.K.நகரில் பாஜக சார்பில் இவர் போட்டியிட்டுள்ளது தெரியவருகிறது. மேலும் சிறுமியின் பெற்றோர்கள் இவனை கண்டித்த போது தான் ஒரு வழக்கறிஞர் என்றும் தனக்கு பல அரசியல் தொடர்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் மீது ஈரோடு காவல்துறை POSCO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.