ஓட்டுக்கு பணம் வாங்க கூறும் மகாராஷ்டிர பா.ஜ.க. தலைவர்

0

மகாராஷ்டிர பா.ஜ.க. தலைவர் ராவ்ஷாஹெப் டான்வீ கடந்த சனிக்கிழமை புதியதொரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டால் அதனை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.

“தேர்தல் நேரங்களில் உங்கள் வீடுகளுக்கு லக்ஷ்மி வந்தால் அதனை பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் கூறியுள்ளார். இவர் இந்த கருத்தை ஒளரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் கூறியுள்ளார்.

இதனை எதிர்கட்சியான காங்கிரஸ் வன்மையாக கண்டித்துள்ளது. மேலும் அவரது இந்த கருத்திற்காக மாநில தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், “டான்வயின் கருத்துக்கள் வாக்காளர்களை தேர்தலின் போது பணம் பெற வற்புறுத்துகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மாநில தேர்தல் ஆணையத்திடம் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க முறையிடும்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.