ஓபிஎஸ் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டாரா? செய்தியாளர்களிடம் கோபத்தை காட்டிய அதிமுகவினர்!

0

தங்கத் தமிழ்ச்செல்வன் ‘ஓபிஎஸ் பாஜகவில் இணையப்போவதாக தவறாக சொல்லிவிட்டேன். அவர் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டார். அதற்காகத்தான் அவர் குடும்பத்தோடு வாரனாசி சென்றார் என கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டனர், அதற்கு நான் பாஜக சேரப்போவது என்பது அடிமுட்டாள் தனமான கருத்து என்று கோபத்துடன் பதில் அளித்தார். தொடர்ந்து இதே கேள்வியை செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டே இருக்க கோவமாக ஓபிஎஸ்,மறுபடி மறுபடி இதுபற்றி கேட்கிறீர்களே? யார் உங்களை தூண்டி விட்டு இப்படி கேட்க சொன்னது? என்று கேட்ட, அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளும் கோபப்பட்டு பத்திரிக்கையாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

Comments are closed.