கஜா புயல்: மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட்

0

கஜா புயல்: மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட்

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. புயலின் கோரத்தாண்டவம் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சீரழித்தது. மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

புயலின் தாக்கத்தில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் ஆரம்பம் முதலே களத்தில் செயல்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, மரங்களை அப்புறப்படுத்துவது என ஆரம்ப கட்ட மீட்பு பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். அதன் பின் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதிலும் இவர்கள் ஈடுபட்டனர். உணவு மற்றும் தண்ணீர் வழங்குதல், மெழுவர்த்தி, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவது என நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நவம்பர் 23 அன்று ஜூம்ஆவிற்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மஸ்ஜித்களில் நிவாரண நிதி சேகரிக்கப்பட்டது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.