கடந்த மூன்று வருடங்களில் 278 நபர்கள் மத மோதலில் பலி

0

நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் நடைபெற்ற மத மோதல்கள் குறித்தும் அதில் பலியானவர்கள் குறித்தும் புள்ளி விபரங்கள் ராஜிய சபாவில் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதில் மொத்தம் 2098 மத மோதல்கள் கடந்த மூன்று வருட காலங்களில் நடைபெற்றுள்ளது என்றும் அதில் மொத்தம் 278 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவல் தெரிவித்த அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், மொத்தம் 450 மத மோதல்களில் 77 பேர் கொலை செய்யப்பட்டு உத்தர பிரதேசம் தான் இதில் முதலிடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக 270 மத மோதல்களில் 32 பேர் கொலை செய்யப்பட்டு மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தில் உள்ளது. இரண்டு மாநிலங்களும் தற்போது பாஜக வால் ஆளப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த எண்ணிக்கையில் பீகாரில் 197 மோதல் நிகழ்வுகளும் 29 கொலைகளும், கர்நாடகாவில் 279 மோதல்களும் 26 கொலைகளும் நடைபெற்றுள்ளன. மேலும் ராஜஸ்தானில் 200 மத மோதல்களில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் குஜராத்தில் 182 மோதல்களில் 21 பேர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.