கடற்கரையில் குழந்தைகளை கொலை செய்தது திட்டமிட்ட செயல் அல்ல: இஸ்ரேல்

0

ஃபலஸ்தீன் காஸா மீது கடந்த வருடம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது ஜூலை 16 அன்று நான்கு குழந்தைகளை இஸ்ரேலிய படையினர் கடற்கரையில் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது எவ்வித கிரிமினல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாது என்று இஸ்ரேல் தற்போது அறிவித்துள்ளது.
அஹத் ஆதிஃப் பகர் (10), ஜக்கரிய்யா அஹது பகர் (10), முஹம்மது ரமீஸ் பகர் (11) மற்றும் இஸ்மாயீல் மஹ்மூத் பகர் (9) ஆகிய இந்த குழந்தைகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த இந்த குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காஸாவில் இருந்த சில பத்திரிகையாளர்களும் இந்த சம்பவத்தை நேரில் கண்டனர்.
இஸ்ரேலிய படையினர் இந்த குழந்தைகளை குறிவைத்து கொலை செய்ததை பலரும் பதிவு செய்தனர். ஆனால் ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்திய இடத்தில் இந்த குழந்தைகள் விளையாடியதாக இஸ்ரேல் தனது தாக்குதலுக்கு தற்போது நியாயம் கற்பித்து வருகிறது. இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட படையினர் மீது எவ்வித கிரிமினல் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாது என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.
பத்திரிகையாளர்கள் கண் எதிரே நடத்தப்பட்ட இந்த கொடூரத்தை இஸ்ரேல் நியாயப்படுத்தி இருப்பது பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.