கடையநல்லூர் மசூத் கஸ்டடி மரண வழக்கு:டி.எஸ்.பி ஈஸ்வரன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றம்

0

கடையநல்லூர் முஹம்மது மசூத் என்ற இளைஞர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் டி.எஸ்.பி ஈஸ்வரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய இயலாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்துள்ளது.

நாகர்கோவிலில் டி.எஸ்.பியாக பணியாற்றிய ஈஸ்வரன் மீது திருச்சி குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்திருந்தது.தன் மீது வழக்கு பதிவு செய்யும் முன்பு அரசின் அனுமதியை பெறவில்லை என்று கூறி ஈஸ்வரன் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் இருந்து கீரிப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மஸூத் அங்கு வைத்து கொடூரமாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்டார்.மசூதின் மனைவை அசனம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஈஸ்வரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அசனம்மாளுக்கு என்.சி.ஹெச்.ஆர்.ஓ சட்ட உதவியை வழங்கியது.
மசூத் நவம்பர் 2005 கொலை செய்யப்பட்டார்.கஸ்டடி மரண வழக்கை இவ்வளவு நாள் நீட்டிக்கொண்டு செல்வது குறித்து நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்தது.வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்குமாறு திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே இவ்வழக்கில் கியூ பிரிவு டி.எஸ்.பி சந்திரபால் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Comments are closed.