கட்டாத விமான நிலையங்களை கட்டியதாக கதைவிடும் மோடி

0

சிக்கிமின் முதல் விமான நிலையத்தை கடந்த 24 ஆம் தேதி மோடி திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது விழாவில் பேசிய மோடி, “இந்தியாவில் தற்போது 100 விமான நிலையங்கள் உள்ளது என்றும் இதில் 35 கடந்த நான்கு வருடங்களில் கட்டியது.” என்று கூறினார்.

இது குறித்து கூறிய அவர்,” இந்திய சுதந்திரத்தில் இருந்து 2014 வரையிலான 67 ஆண்டுகளில் வெறும் 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. அதாவது ஒரு வருடத்திற்கு சராசரியாக ஒரு விமான நிலையம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு வருடத்திற்கு ஒன்பது விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.” என்று அவர் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி கடந்த நான்கு வருடங்களில் வெறும் 7 விமான நிலையங்களே செயல்பாட்டிற்கு வந்துள்ளன. பொது விமான போக்குவரத்து துறையின் 2017-2018 அறிக்கையின் படி, Airport Authority of India விற்கு சொந்தமான 129 விமான நிலையங்களில் 23 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும். 78 உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகும் மேலும் 20 பாதுகாப்பு படை விமான தளங்கள் ஆகும்.

இந்த 129 விமான நிலையங்களில் 101 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. 28 விமான நிலையங்கள் செயல்பாடற்ற நிலையில் உள்ளன. இது மக்களவையில் 2018 ஜூலை மாதம் 19 மற்றும் 2018 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதிகளில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்.

2013 – 2014 வரையிலான விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையின்படி 2014 மார்ச் மாதம் 31 ஆம் தேதி நிலையில் AAI மொத்தம் 125 விமான நிலையங்களை பெற்றிருந்தது. இதில் 94 செயல்பாட்டிலும் 31 செயல்பாடற்ற நிலையிலும் இருந்தது. இந்தக் கணக்கீட்டின்படி கடந்த நான்கு வருடங்களில் வெறும் 7 விமான நிலையங்களே செயல்பாட்டில் வந்துள்ளன.

தற்போது மோடி திறந்து வைத்த பக்யோங் விமான நிலையமும் 2008 ஆம் ஆண்டில் ஒப்புதலளிக்கப்பட்ட விமான நிலையமாகும். இந்த விமான நிலைய பணிகளில் சுமார் 83% பணிகள் 2014 ஆம் ஆண்டே முடிவடைந்திருந்தது. இந்த விமான நிலைய கட்டுமானப் பணி பல இயற்க்கை சீற்றங்களாலும், பல போராட்டங்களாலும் தாமதமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனது பொய்களின் பட்டியலில் மோடி விமான நிலைய சாதனைகளையும் சேர்த்துள்ளார்.

 

Comments are closed.