கண்களை குருடாக்கி கொலை! பத்திரிகையாளரின் மகனுக்கு நடந்த கொடூரம்!

0

பீஹார், நாளந்தாவில் சுனு குமார் என்ற 15 வயது சிறுவனின் கண்களை குருடாக்கி கொலை செய்துள்ளனர்.

பீஹார் மாநிலம் நாளந்தாவில் நேற்று இரவு சுனு குமார் என்ற சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி இரு கண்களையும் குருடாக்கி கொலை செய்து உடலை அருகிலுள்ளா குளத்தில் தூக்கி வீசியுள்ளனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்த பின்பு போலிஸார் அந்த சிறுவனின் உடலை மீட்டனர்.

சிறுவனின் உடலை சோதனையிட்ட போது,  உடம்பில் எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை. ஆனால் இரு  கண்களிலும் ரத்தம் வடிந்துள்ளதாக நாளந்தா காவல்துறை எஸ்.பி. நிலேஷ் குமார் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுவதாவும் அவர் தெரிவித்தார்.

சுனுகுமாரின் தந்தை ஊடக நிறுவனத்தில் மூத்த பத்திரிகையாளராக பணிபுரிந்துவருகிறார். மர்ம நபர்கள் அவரை கொல்வதற்கு முன்னரே இரு கண்களையும் குருடாக்கி கொலை செய்திருக்ககூடும் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply