கதிரியக்கத்தில் இருந்து பாதுகாப்பு பெற மாட்டுசாணம் பயன்படுத்துங்கள்: ஆர்.எஸ்.எஸ். தலைவர்

0

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய காவ் சேவா அமைப்பின் தலைவர் ஷங்கர்லால் அவர்களிடம் அவரது அலைபேசியின் பின் ஏன் மாட்டு சாணம் உள்ளது என்று கேட்கப்பட்டதற்கு, அது புதிய சாணம் என்றும் அது தன்னை அலைபேசியின் கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது என்று பதிலளித்துளார். மேலும் அது நல்ல பலன் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தான் மட்டும் அல்லாது தனது குழுவில் உள்ள ஆண், பெண், குழந்தைகள் முதற்கொண்டு பலரும் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாட்டுச் சாணத்தில் இருந்து வேறென்ன செய்கிறீர்கள்ள் என்று அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, தாங்கள் மாட்டு சிறுநீரை குடிப்பதாகவும், மாட்டுச் சாணத்தில் எடுக்கப்பட்ட ஒரு வகை பொருளை உண்பதாகவும் அது தான் தன்னை 76 வயதிலும் ஆரோக்கியமாக வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

கர்பிணிப் பெண்களுக்கு மாட்டுச்சாணம் மற்றும் மாட்டின் சிறுநீர் கலந்த கலவையை உண்ணக் கொடுப்பதாகவும் அது அவர்கள் சுகப் பிரசவம் அடைய உதவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அனைத்து கொடுமையான நோய்களையும் மாட்டுச்சாணம் கொண்டு குணப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை அனைத்தும் இந்திய பசுக்களுடையதாக இருக்க வேண்டும் என்றும் மேற்கத்திய அரக்கர்களான ஜெர்சி, ஹோல்ஸ்டீன் போன்ற மாடுகளுடையதாக இருக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய பசுக்களின் பால் மற்றும் சாணம் வெறும் விஷம் என்று கூறியுள்ளார்.

Comments are closed.