கதுவா கற்பழிப்பு வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்: ஜம்மு கஷ்மீர் பாஜக துணை முதல்வர்

0

கதுவா கற்பழிப்பு வழக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்: ஜம்மு கஷ்மீர் பாஜக துணை முதல்வர்

ஜம்மு கஷ்மீர் துணை முதல்வராக புதிதாக பதவியேற்ற கவிந்தர் குப்தா, கதுவா சிறுமியின் கற்பழிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், அது ஒரு சிறிய சம்பவம் தான் என்றும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

தான் துணை முதல்வராக பதவியேற்ற சில மணி நேரங்களில் இது குறித்து அவர் கூறுகையில், “ரசனா சம்பவம் ஒரு சிறு சம்பவம் தான். இது மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை தான் நாம் எண்ணவேண்டும். இது போன்ற பல சவால்கள் இந்த அரசை எதிர்நோக்கி உள்ளன. அதனால் நாம் ரசனா சம்பவத்திற்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

இத்துடன் சிறுமி ஆசிஃபா கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஹிந்து ஏக்தா மனச் அமைப்பினர் நடத்திய பேரணியில் பங்கெடுத்து அதற்கு தனது ஆதரவை தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் ஜரோதியாவிற்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளது பாஜக அரசு.  இவர் ஹிந்து ஏக்தா மனச் அமைப்பினர் நடத்திய பேரணியில் கலந்துகொண்டதுடன் மேலும் எட்டு பேருடன் சேர்ந்து அந்த பேரணியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்.

முன்னதாக பாஜகவை சேர்ந்த லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் என்ற அமைச்சர்கள் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் பங்கெடுத்த காரணத்தால் பதவியை ராஜினாமா செய்தார்கள். பின்னர் சந்தர் பிரகாஷ் கங்கா, தான் பாஜக வின் அறிவுறுத்தலின் பேரிலேயே அந்த பேரணியில் பங்கெடுத்ததாக தெரிவித்தார். மேலும் தனது கட்சியின் அரசியல் பிம்பத்தை பாதுகாக்க தான் பலியாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.