கதுவா கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர் 20 வயதிற்கு மேற்பட்டவர்: மருத்துவ அறிக்கை

0

கதுவா கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர் 20 வயதிற்கு மேற்பட்டவர்: மருத்துவ அறிக்கை

ஜம்மு கஷ்மிர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவனை சிறுவர் என்று காவல்துறை தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளியான மருத்துவ அறிக்கையின்படி அவன் 20 வயது நிரம்பியவன் என்று தெரிய வந்துள்ளது.

இந்த மருத்துவ அறிக்கையை பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் ஜம்மு கஷ்மீர் காவல்துறை தற்போது சமர்பித்துள்ளது. முன்னதாக மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தஜ்விந்தர் சிங், இவ்வழக்கில் சிறுவன் என்று கூறப்பட்ட பர்வேஷ் குமார் என்ற மண்ணுவின் வயதை நிர்ணயிக்கக் கூடிய மருத்துவ பரிசோதனையை செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.

தற்போது அவரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நிலையில் அவரையும் நீதிமன்றம் வயது முதிர்ந்தவராக கருதும் என்று அவரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பர்வேஷ் குமார் தான் சிறுவர் என்பதை நிறுவ தனது பள்ளி சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தார். தற்போது மருத்துவ பரிசோதனையின் அறிக்கையில் அவர் 20 முதல் 21 வயது நிரம்பியவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட நிலையில் பர்வேஷ் குமாரை இவ்வழக்கில் சிறுவராக கருத முடியாது என்றும் பர்வேஷ் குமார் வயது முதிர்ந்தவராகவே இவ்வழக்கில் நடத்தப்படுவார் என்று நீதிமன்றம் தெரிவத்துள்ளது.

Comments are closed.