கத்வா தீர்ப்பு உணர்த்துவது என்ன?

0

கத்வா தீர்ப்பு உணர்த்துவது என்ன?

மதவெறியும், இனவெறியும் உள்ளத்தில் உறைந்துபோன, மனிதத்துவத்தை இழந்துவிட்ட கொடிய பயங்கரவாதிகளுக்கு  பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றம் தண்டனைகளை வழங்கியுள்ளது. ஜம்மு- கஷ்மீர் மாநிலம் கத்வாவில் 2018 ஜனவரி 10 அன்று எட்டு வயது சிறுமியை ஒரு கோயிலில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த மாபாதகர்களுக்கு நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது. நாடோடிகளான பகர்வாலா சமூகத்தைச் சேர்ந்த 20 முஸ்லிம் குடும்பங்கள், பிராமண உயர்சாதியினரின் செல்வாக்கு மிகுந்த ரஸானா பகுதியில் நிலத்தை வாங்கி நிரந்தரமாக குடியேற தீர்மானித்ததே இந்த சிறுமியிடம் மிருகத்தனமான கொடூரத்தை செய்ய இந்துத்துவ பயங்கரவாதிகளை தூண்டியுள்ளது.

வழக்கை சீர்குலைக்க குற்றவாளிகளின் வலுவான பின்னணியிலிருந்து முயற்சிகள் நடந்தபோதிலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு ஆதாரங்களையும், சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதும், பாரபட்சமற்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியதும் நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. முக்கிய குற்றவாளியான கிராமத் தலைவன் சாஞ்சி ராம், பர்வேஷ் குமார், போலீஸ் அதிகாரி தீபக் கஜூரியா ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்களை அழிக்க துணைபோன சிறப்பு போலீஸ் அதிகாரி ஆனந்த் தத்தா, தலைமை காவலர் திலக் ராஜ், துணை ஆய்வாளர் சுரேந்திர வர்மா ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய எட்டு பேர்களில் வயது தொடர்பான சர்ச்சை தொடர்வதால் ஒருவர் மீதான விசாரணை ஐயத்திற்கிடமான நிலையில் உள்ளது. ஏழாவது குற்றவாளியும் சாஞ்சி ராமின் மகனுமான விசால் ஜாங்கோத்ராவை ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இவ்விஷயங்களை சுட்டிக்காட்டி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அரசு தரப்பு தயாராகுவது வரவேற்கத்தக்கது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.