கனடா பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு:ஆறு பேர் பலி

0

கனடாவில் உள்ள குபெக் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை கனடா நாட்டு முதல்வர் ஜஸ்டின் டிரிடியு வன்மையாக கண்டித்துள்ளார்.

ஞாயிறு மாலை தொழுகையின் போது குயுபேக் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டை மூன்று நபர்கள் நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான முதல் அழைப்பு காவல்துறையினருக்கு 8 மணியளவில் வந்ததாக தெரிகிறது.

இது வரை இந்த தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்றாம் நபர் இன்னும் வெளியில் இருப்பதாகவும் காவல்துறை அவரை தேடி வருவதாகவும் அப்பகுதி செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒருவனுக்கு வயது 27  என்றும் அவன் AK 47 ரக துப்பாக்கி மூலம் இந்த தாக்குதலை நடத்தியாதாகவும் தெரிகிறது. இதனை ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் “முஸ்லிம்கள் அடைக்கலம் தேடியும் வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடும் மையத்தில் நடைபெற்ற இந்த தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிண்டோரம்” என்று கூறியுள்ளார்.

மேலும்,” இத்தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வரும் இந்த வேலையில், இது போன்ற அறிவற்ற வன்முறையை பற்றி அறிந்த போது மனமுடைந்து போகிறது. பன்முகத்தன்மை நமது சக்தி, சகிப்புத்தன்மை நமது கொள்கை, கனடியர்களாக நாம் இதனை பற்றிபிடித்துக்கொள்ள வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் 35 முதல் 70  வயது நிரம்பியவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது இந்த கட்டிடத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்டு அங்கிருந்தவர்களை காவல்துறை வெளியேற்றியுள்ளது. அப்பகுதியை சுற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கனடா நாட்டு தலைவர்கள் பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த பள்ளிவாசல் இதற் முன்னர் ஒரு முறையும் வன்முறையாளர்களால் குறிவைக்கப்பட்டுள்ளது. கடந்த ரமழான் மாதத்தில் அந்த பள்ளியில் பன்றியின் தலை ஒன்றை மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். அதற்கு சில வாரங்கள் பிறகு அந்த பள்ளி இருக்கும் பகுதியில் இஸ்லாமிய எதிர்ப்பு கடிதங்கள் விநியோக்கிக்கப்பட்டுள்ளது.

தற்போதையை இந்த தாக்குதலும் முந்தைய நாள் கனடா பிரதமர் ஜஸ்டின் முஸ்லிம் அகதிகளை கனடா வரவேற்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவில் முஸ்லிம்களை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.