கன்னையா குமாருக்கு இடைக்கால ஜாமீன்!

0

புதுடெல்லி:தேசத் துரோக வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ஜே.என்.யு மாணவர் யூனியன் தலைவர் கன்னையா குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆறு மாத காலத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.இடைக்கால ஜாமீன் தொகையாக ரூ.10 ஆயிரம் கட்டவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நீதிபதி பிரதிபா ராணி உத்தரவிட்டார்.ஜாமீன் தொகையை ஜே.என்.யு ஆசிரியர்கள் வழங்கினர்.

ஜாமீன் மனுவை விசாரிக்கும் போது டெல்லி போலீஸை, நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.தேச துரோக குற்றம் என்றால் என்ன? என்று தெரியுமா? என்று போலீஸிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஜாமீனை எதிர்க்க போலீஸ் முன் வைத்த வாதங்களை நிராகரித்தது.ஆனால், இதைப்போன்று வழக்கு சுமத்தப்பட்ட ஜே.என்.யு மாணவர்களான உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவில்லை.
தேசத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியதற்கு ஆதாரமாக டெல்லி போலீஸ் சமர்ப்பித்த வீடியோ போலியானது என்பது ஃபாரன்ஸிக் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்தே கன்னையா குமாருக்கு ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.நேற்று வீடியோ போலியானது என்பது குறித்த ஃபாரன்ஸிக் அறிக்கை வெளியானது.தேசத்திற்கு எதிரான முழக்கங்களை வீடியோவில் இணைக்கப்பட்டது ஃபார்ன்சிக் சோதனையில் தெரியவந்தது.

மேலும் படிக்க: JNU

Comments are closed.