கமலின் இந்து தீவிரவாதி கருத்து: மறுப்பு தெரிவித்த நரேந்திர மோடி

0

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசினார்.

தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மோடியும் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்று கமல் பேச்சுக்கு மோடி விளக்கம் அளித்துள்ளார். எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் அப்படி இருந்தால் அவர் இந்து அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். கோட்சே தான் முதல் இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் பேசியது குறித்த கேள்விக்கு மோடி பதில் அளித்துள்ளார்.

உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து மதத்தின் ஆழமான நம்பிக்கை என்றும் மோடி கருத்து தெரிவித்தள்ளார்.  இதனை தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மோடி கமல் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Comments are closed.