கமலுக்கு எதிராக பாஜக தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

0

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். இதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கமல் பேச்சை எதிர்த்து பாஜகவின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேட்டனர். இதற்கு மனுதாரர் கூறுகையில் கமல் பேசியது கடுமையான தேர்தல் விதிமீறல் என்பதால் டெல்லியை அணுகியதாக மனுதாரர் பதில் அளித்துள்ளார்.

கமலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினர். மேலும் நீதிபதிகள் கமல்ஹாசனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தனர்.

Comments are closed.